குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அமைதி முன்னேற்றத்திற்கான முன்நிபந்தனை; குடியரசு துணைத்தலைவர். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பேருரை

Posted On: 15 OCT 2018 1:05PM by PIB Chennai

அமைதியானது, முன்னேற்றத்திற்கான  முன்நிபந்தனை என்றும் இந்தியா  உயர்ந்து வருவதாகவும், உலகமே நம்மை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில், “இந்தியாவின் யுக்தி சார்ந்த கலாச்சாரம், நாட்டின் குறிப்பிடத்தக்க மைய விழுமியங்கள், கவனத்திற்குரியவை மற்றும் குறிக்கோள்கள்” பற்றி குடியரசுத் துணை தலைவர் பேருரையாற்றினார்.

    அவ்வப்போது கூறப்படும் “வாசுதேவ குடும்பம்” என்ற தொடருக்கு ஏற்ப இந்த உலகம் ஒரு பெரிய குடும்பம் என்பதை நம் நாடு நம்புவதாக குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். புவியிலும் அதில் வாழும் மனிதர்களுக்கும் மட்டும் அமைதி தேவை என்பதையும் கடந்து, ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் அது தேவை என்பதை நமது நாடு விரும்புகிறது.

   வன்முறை சார்ந்த எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் நடவடிக்கைகளால் பிரிந்து கிடக்கும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்

   அமைதிக்கான கல்வியும், ஒன்றாக வாழ்வதற்கான புரிதலுமே தற்போதைய தருணத்தின் தேவை என்றார் குடியரசு துணைத்தலைவர். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும், இந்தியா ஒரு முதிர்ச்சி அடைந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், தோட்டாக்களைவிட வாக்குகள் வலிமையானவை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

------


(Release ID: 1549719) Visitor Counter : 155
Read this release in: English , Hindi , Marathi , Bengali