பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பீக்கோ லாறி நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 OCT 2018 1:35PM by PIB Chennai

    பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில், பீக்கோ லாறி நிறுவனத்தை மூடும் திட்டத்திற்கும், இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வுத்திட்டம் (வி.ஆர்.எஸ்) / விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் திட்டம்  ( வி.எஸ்.எஸ்.) ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பீக்கோ லாறி நிறுவனத்தின் கடன்களை முழுமையாக அடைத்த பிறகு, இந்நிறுவனத்தின் எஞ்சிய சொத்துக்கள் ஆக்கப்பூர்வமான வகையில், பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    இந்த நிறுவனத்தைப் புனரமைக்க பெட்ரோலியம் மற்றும்இயற்கை எரிவாயுத் துறை அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும், இந்த நிறுவனத்தைப் புனரமைக்க முடியாமல் போனதுடன்,  பெருமளவிலான முதலீடு தேவைப்பட்டதாலும் வர்த்தக போட்டிச் சூழல் காரணமாகவும் புனரமைப்பதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. தொடர் இழப்புகளால் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கியதுடன், நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.

------



(Release ID: 1549235) Visitor Counter : 163


Read this release in: English , Marathi , Bengali