மத்திய அமைச்சரவை
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான பேர்ட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 OCT 2018 1:36PM by PIB Chennai
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான பேர்ட்ஸ் சணல் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை மூட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பலன்கள்:
நலிவடைந்துள்ள இந்த இரு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தொடர் செயல்பாடுகளுக்காக செலவிடப்படும் தொகை குறைவதால் அரசுக் கருவூலம் பயன்பெறும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடுவதென்ற முன்மொழிவு, அவற்றின் மதிப்புமிக்க சொத்துக்களை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கோ அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வளங்களை உருவாக்கவோ பயன்படும்.
சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்த இரு பொதுத் துறை நிறுவனங்களின் நிலங்களும் பொதுப் பயன்பாட்டிற்கோ அல்லது பிற அரசுப் பயன்பாட்டிற்கோ அளிக்கப்படும்.
****
(रिलीज़ आईडी: 1549222)
आगंतुक पटल : 174