மத்திய அமைச்சரவை

தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சிலான என்.சி்.வி.டி. மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை என்.எஸ்.டி.ஏ. ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி. –யை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 10 OCT 2018 1:31PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில்  என்.சி்.வி.டி., தேசிய திறன் மேம்பாட்டு முகமை என்.எஸ்.டி.ஏ.  என தற்போதுள்ள திறன் மேம்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி.–யை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவரம்:

நீண்ட கால மற்றும் குறுகிய கால தொழில்கல்வி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின்  செயல்பாடுகளை  என்.சி.வி.இ.டி. முறைப்படுத்துவதுடன், இது போன்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கான குறைந்தபட்ச தரத்தையும் நிர்ணயிக்கும்.  என்.சி.வி.இ.டி.–யின் அடிப்படை பணிகள் வருமாறு:-

  • விருது வழங்கும் அமைப்புகள், மதிப்பீட்டு அமைப்புகள் மற்றும் திறன் சார்ந்த தகவல் வழங்குவோரை அங்கீகரித்தல் மற்றும் முறைப்படுத்துதல்;
  • விருது வழங்கும் அமைப்புகள் மற்றும் அமைப்பு சார்ந்த திறன் கவுன்சிலால் உருவாக்கப்பட்ட தகுதியை அங்கீகரித்தல்;
  • தொழிற்பயிற்சி நிறுவனங்களை, விருது வழங்கும் அமைப்புகள் மற்றும் மதிப்பீட்டு முகமைகள் வாயிலாக மறைமுகமாக முறைப்படுத்துதல்;
  • ஆராய்ச்சி மற்றும் தகவல் பரவல் ;
  • குறை தீர்ப்பு.

 

தலைவர் ஒருவர் தலைமையிலான இந்த கவுன்சில், நிர்வாகம் மற்றும் நிர்வாகம் சாராத உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.  தற்போதுள்ள இரண்டு அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் என்.சி.வி.இ.டி., பெரும்பாலான இடங்களில்,  ஏற்கனவே உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆதாரங்களை  பயன்படுத்திக் கொள்ளும். இது தவிர, புதிய அமைப்பு சுமூகமாக செயல்பட ஏதுவாக கூடுதலாக சில பணியிடங்கள் உருவாக்கப்படும். புதிய ஒழுங்குமுறை அமைப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சிறப்பானவற்றைப்  பின்பற்றுவதுடன், பொருந்தக்கூடிய சட்டங்களின்படி தொழில் ரீதியாக செயல்படுவதை உறுதி செய்ய உதவும்.

பலன்கள்:

     அமைப்பு ரீதியான இந்த மாற்றம் தொழில்கல்வி மற்றும் சந்தையின் தேவைக்கேற்ற, திறன் வளர்ச்சித் திட்டங்களை வழங்கும் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும். திறன் வளர்ச்சித் துறையில் தனியார் முதலீடு மற்றும் வேலை வழங்குவோரின் பங்களிப்பை ஊக்குவிப்பதாகவும் இது அமையும். அத்துடன் தொழில் கல்வி மீதான விருப்ப மதிப்பை அதிகரிக்கச் செய்வதோடு திறன் பயிற்சி பெற்ற மனித வளத்தை அதிகரித்து, உலகின் திறன்மிக்கத் தலைநகராக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் அமையும்.

     இந்தியாவின் திறன் சூழல் துறையின் ஒழுங்குமுறை அமைப்பு என்ற வகையில், நாட்டில் தொழில்கல்வி மற்றும் பயிற்சியில்  ஒரு பங்குதாரராக  திகழும்  தனிநபர்களிடம் சாதகமான விளைவுகளை என்.சி.வி.இ.டி. உருவாக்கும். திறன் சார்ந்த கல்வி முறை மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைவதுடன், மாணவர்களை திறன் சார்ந்த  படிப்புகளில் சேர்வதையும் ஊக்குவிப்பதாக அமையும்.  இது, திறன் பயிற்சி பெற்ற தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைகளில் பயன்படுத்துவதற்கு நிலையாக வழங்குவதற்கும், தொழில் தொடங்கும் நடவடிக்கைகளை மேலும் எளிமைப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

----



(Release ID: 1549217) Visitor Counter : 186