சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருந்து பொருட்களை அணுகுவது பற்றிய 2-வது உலக மாநாடு; பேணுவதற்கான வளர்ச்சி இலக்குகள் 2030” ஜெ பி நட்டா தொடங்கி வைத்தார்

Posted On: 09 OCT 2018 3:30PM by PIB Chennai

தேசியம் மற்றும் உலக அளவில் அனைத்து பொது சுகாதார இலக்குகளை சாதிப்பதில் இந்தியா ஆழமான உறுதிப்பாட்டை கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா கூறியுள்ளார். மருந்து பொருட்களை அணுகுவது; பேணுவதற்கான வளர்ச்சி இலக்குகள் 2030 பற்றிய 2-வது உலக மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், அனைத்து குடிமக்களுக்கும் முடிந்த அளவிற்கு உயர்தர சுகாதார வசதிகளை வழங்குவதற்கு நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார். பேணத்தக்க வளர்ச்சி இலக்குகளை சாதிக்கத் தேவையான அனைவருக்குமான சுகாதாரத் திட்டத்தை அடைவதில் இந்தியா உறுதிப்பாட்டோடு இருப்பதாக அவர் கூறினார்.      

   இந்நிகழ்ச்சியில் தென்கிழக்கு ஆசிய கட்டுப்பாட்டு கட்டமைப்பின் தகவல் பரிமாற்ற களத்தின் வாயிலைத் தொடங்கி வைத்து அமைச்சர் அறிக்கையையும் வெளியிட்டார்.

  இந்த வாயில் தென்கிழக்காசிய நாடுகளில் கட்டுப்பாடு மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்லும்.

  மேலும் விவரங்களுக்கு  www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

----


(Release ID: 1549088) Visitor Counter : 192
Read this release in: English , Hindi , Marathi