குடியரசுத் தலைவர் செயலகம்

மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் “தூய்மை இந்தியா” நடைமுறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது

Posted On: 29 SEP 2018 2:46PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டை இன்று (29.09.2018) தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் போதிய அளவில், துப்புரவு மற்றும் சுகாதார நலத்திட்டங்களை உருவாக்குவது உலகின் பல பகுதிகளில் பெரும் சவாலாக எழுந்துள்ளது என்றார். குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகியவை நீடித்த மேம்பாட்டு நோக்கத்திற்கான முக்கிய மையம் என்றும் அவர் குறிப்பிட்டார். நீடித்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதையும், ஒவ்வொருவருக்கும் அடிப்படைக் கழப்பிட வசதியை உறுதி செய்வதையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

துப்புரவை மேம்படுத்துவது, திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பது ஆகியவற்றால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமூக மற்றும் பொருளாதார முதலீடுகள் அதிகம் தேவைப்படுகின்றன. தகுந்த கழிப்பிட வசதி மற்றும்  உரிய சுகாதாரம் மற்றும் துப்புரவு வசதிகள் இல்லாமல் இருப்பது, உடல் குறைபாட்டுக்கும் வாழ்நாள் முழுவதும் சிக்கல்களை எதிர்நோக்குவதற்கும் வழிவகுத்துவிடும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியா திட்டம் நடைமுறையில் புரட்சியை ஏற்படுத்தி வருவதாக எடுத்துரைத்த திரு. ராம் நாத் கோவிந்த், மக்களின் ஆதரவை திரட்டும் பெரும் உந்து சக்தியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்றார். மக்கள் இயக்கமான தூய்மை இந்தியா, நமது விடுதலை இயக்கத்தின் உணர்வை பிரதிபலிப்பதாகவும், காந்திஜியின் 150-வது பிறந்த தினப் பரிசாக அக்டோபர் 2, 2019-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதை தேசிய குறிக்கோளாகக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் உரை குறித்த மேலும் தகவல்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

------------



(Release ID: 1547942) Visitor Counter : 143


Read this release in: English , Marathi