பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
போக்குவரத்து வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மாற்று எரிவாயு திட்டத்தை அறிமுகம் செய்கிறார் பெட்ரோலியத் துறை அமைச்சர்
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2018 12:23PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் 01.10.2018 அன்று போக்குவரத்து வாகனங்களுக்கான உயிரி எரிவாயு உற்பத்திக்கான ஆலைகளை அமைக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த திட்டம் தொடர்பாக ஆர்வமுள்ள தொழில் முனைவோரிடம் இருந்து கேட்டுப் பெறுமாறு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை (ஐ.ஓ.சி, பி.பி.சி.எல், எச்.பி.சி.எல்) கேட்டுக் கொண்டுள்ளார். உயிரி எரிவாயு உற்பத்தி செய்வதன் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு நியாயமான விலையில் எரிபொருள் கிடைக்க வழி ஏற்படும் என்றும், இதற்காக வேளாண் கழிவு, கால்நடைக் கழிவு மற்றும் நகராட்சி மூலம் திடக்கழிவுகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார். சதாத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எரிவாயு உற்பத்தித் திட்டம் போக்குவரத்து வாகனங்களுக்கு மாற்று எரிவாயுவை தங்குதடையின்றி கிடைக்க வகை செய்யும் என்றார் அமைச்சர். வாகனப் பயன்பாட்டாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் இந்த திட்டம் பயனளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கூறினார்.
தூய்மையே சேவை இருவாரக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்நாளில், மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் மக்களின் திட்டமாக அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார். அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் போக்கை குறைக்க உதவும் என்றும் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
********
(வெளியீட்டு அடையாள எண்: 1547874)
வருகையாளர் எண்ணிக்கை : 166