உள்துறை அமைச்சகம்
சிறப்புப் பாதுகாப்புப் படை குறித்து திரு. ராகுல்காந்தி அறிக்கை தொடர்பான விளக்கம்
Posted On:
24 SEP 2018 12:52PM by PIB Chennai
“திரு. நரேந்திர மோடி பொறுப்பேற்றபோது, சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆர்எஸ்எஸ் பரிந்துரை செய்த அதிகாரிகள் பட்டியலை ஏற்காத காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டார்” காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 22) புது தில்லியில் கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இச்செய்தி குறித்து விசாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநர் திரு. விவேக் ஸ்ரீவத்ஸவா இது தொடர்பாக திரு. ராகுல் காந்தியுடன் எந்தக் கட்டத்திலும் பேசவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், தொழில்நிமித்தமாக பாதுகாப்பு பெறுவோருடன் பாதுகாப்புப் படையினர் பேசுவதுண்டு என்று கூறிய அவர், திரு. ராகுல் காந்தியுடன் விவாதிக்கும்போது, சிறப்புப் பாதுகாப்புப் படை புதிய இயக்குநர் நியமனம் குறித்தோ, தான் பதவியிலிருந்து விலகியது குறித்தோ எதுவும் பேசவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.
சிறப்புப் பாதுகாப்புப் படை என்பது தொழில்முறை அமைப்பாகும். ஆட்சியில் உள்ள பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் மிக உயர்ந்த தொழில்முறைப் பணியை மேற்கொள்ளும் அமைப்பாகும். திரு. ராகுல் காந்தி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதுவும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ளவரிடமிருந்து வெளியாவது ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது, துரதிர்ஷ்டவசமானது.
*****
(Release ID: 1547075)