இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

2018 தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

மீராபாய் சானு, விராட் கோலி ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுகிறார்கள்

Posted On: 20 SEP 2018 2:29PM by PIB Chennai

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான  தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கடந்த நான்கு ஆண்டுக்காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பளு தூக்கும் வீராங்கனை எஸ். மீராபாய் சானு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது, இந்த முறை தடகள வீரர்கள் மீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ் உள்ளிட்ட 20 பேருக்கு வழங்கப்படுகிறது.

    பிரபலமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருது இம்முறை குத்துச்சண்டை பயிற்சியாளர் சுபேதார் செனானந்த அச்சய்யா குட்டப்பா, பளு தூக்கும் பயிற்சியாளர் விஜய் சர்மா உள்ளிட்ட 8 பேருக்கு வழங்கப்படுகிறது.

    விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆயுட்கால பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தியான்சந்த் விருது, வில்வித்தை வீரர் சத்யதேவ் பிரசாத், ஹாக்கி வீரர் பாரத் குமார் சேத்ரி உள்ளிட்ட நான்கு பேருக்கு வழங்கப்படுகிறது. 

   விளையாட்டு மேம்பாட்டுக்கு பங்களித்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கான தேசிய விளையாட்டு மேம்பாட்டு விருது இந்த ஆண்டு ராஷ்ட்ரீய இஸ்பாத் நிகம் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற  பல்கலைக்கழகத்திற்கான மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை இந்த ஆண்டு அம்ரிஸ்டர் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகிறது.

   குடியரசுத் தலைவர் மாளிகையில் இம்மாதம் 25-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவார்.

    மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                         ***********


(Release ID: 1546832)
Read this release in: English , Urdu , Marathi , Hindi