திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் இந்தியா இயக்கத்தில் தூதர்களாக வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா தேர்வு
प्रविष्टि तिथि:
19 SEP 2018 2:00PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் திறன் இந்தியா இயக்கத்தை பரப்புவதற்காக இந்தி திரைப்பட நட்சத்திரங்களான வருண் தவான், அனுஷ்கா ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலக அளவில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மற்றும் திறன்மிகு ஊழியர்கள், முக்கியமாக உள்நாட்டு கலைஞர்கள், கைவினைப்பொருட்கள் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த இருநட்சத்திரங்களும் சூயி தாகா – மேட் இன் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் இந்தியாவின் சிறந்த கைவினைக் கலைஞர்களின் கண்டறியப்படாத திறன்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. வருண், அனுஷ்கா மற்றும் திரைப்படக் குழு திறன்மிகு இந்தியா இயக்கத்துடன் இணைந்து நாடுமுழுவதும் உள்ள திறன்மிகு கலைஞர்களுடன் நேரம் செலவழித்து அவர்களின் வேலைப்பாடுகளை பிரபலப்படுத்தவுள்ளனர்.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், உள்நாட்டுக் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்களின் சமூகத்தின் சிறந்த திறன்களை சூயி தாகா – மேட் இன் இந்தியா என்ற திரைப்படத்தின் மூலம் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா வெளிக்கொண்டு வந்துள்ளனர். சமூக அக்கறைக் கொண்ட திரைப்படங்களில் இதுபோன்ற நட்சத்திரங்கள் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற மனஉறுதி மற்றும் திறன்மிகு இளைய தொழில்முனைவோர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். இளைஞர்கள், திறன் பயிற்சி மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை பெறும் வகையில் இந்த இருநடிகர்களும் ஊக்குவிக்க வேண்டும். இது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவான புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
*******
(रिलीज़ आईडी: 1546688)
आगंतुक पटल : 159