நிதி அமைச்சகம்

வரியைத் திரும்பப் பெற வங்கி விவரங்களை கேட்கும் போலி மின்னஞ்சல் / குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

Posted On: 18 SEP 2018 5:38PM by PIB Chennai

வரி செலுத்துவோர் தங்களின் வரியை திரும்பப் பெறுவதற்காக வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி) மூலம் மின் இணைப்புகள் அனுப்பப்படுவதாக வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வருமான வரித் துறை இதுதொடர்பாக எந்தவிதமான மின்னஞ்சல்களோ அல்லது குறுஞ்செய்திகளோ அனுப்புவதில்லை. மேலும், வருமான வரித்துறை மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் பாஸ்வேர்டு, வங்கி விவரங்கள் போன்றவற்றை ஏற்பதில்லை. வரி செலுத்துவோர் தங்களின் முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற சுயவிவரங்களை வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

வருமான வரி செலுத்துவோர் இதுபோன்ற போலியான மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள்மீது எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

*****

ரெசின்/அரவி/க



(Release ID: 1546536) Visitor Counter : 126


Read this release in: English