பிரதமர் அலுவலகம்

வங்காளதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 திட்டங்களை காணொலி மூலம் கூட்டாக தொடங்கிவித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 SEP 2018 6:51PM by PIB Chennai

வங்காளதேச பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹசீனா அவர்களே,

இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்களே,

மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சர் திருமிகு. மம்தா பானர்ஜி அவர்களே,

திரிபுரா மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. பிப்லப் குமார் தேவ் அவர்களே,

சில நாட்களுக்கு முன், காத்மாண்டுவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் நான் ஷேக் ஹசீனா அவர்களை சந்தித்தேன். அதற்கு முன்னாள் மே மாதம் சாந்திநிக்கேத்தனிலும் ஏப்ல் மாதம் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிலும் நாங்கள் சந்தித்துள்ளோம்.

இன்று மறுபாதியும் காணொளிப்பதிவு மூலம் உங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதற்கு முன்பிருந்தே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, நமது அண்டை நாடுகளுடனான நமது உறவு அண்டை வீட்டாருடன் இருப்பதுபோல் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதே. நாம் நினைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் சந்திக்கவோ உரையாடவோ முடியும். இதுபோன்ற விஷயங்களுக்கு நம்மை நெறிமுறைகள் கட்டிவிடக் கூடாது.

பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுடனான உறவில் நான் இந்த நெருக்கத்தை தெளிவாக பார்க்கிறேன். பல்வேறு கூட்டங்கள் அல்லாமல் நாங்கள் காணொளிப் பதிவு மூலம் உரையாடுவதில் இது நான்காவதாகும். இதுபோன்ற மற்றொரு காணொலி கூட்டம் மிக விரைவில் நடக்க உள்ளது.

இதுபோன்ற காணொலிப்பதிவு கூட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு முக்கிய பிரமுகர்களின் வருகை அவசியம் இல்லை.

மதிப்பிற்குரிய ஷேக் ஹசீனா அவர்களே, எப்போதெல்லாம் நாம் இணைப்புகள் குறித்து பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இது குறித்து 1965 ஆம் ஆண்டுக்கு முன்பே உங்களுக்கு இருந்த தொலைநோக்கு பார்வையை மீண்டும் நினவுகூர்வதுபோல் உணர்கிறேன். இந்த திசையை நோக்கி நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பயணித்துவருகிறோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நாம் எரிசக்தி இணைப்பினை மேம்படுத்தியுள்ளோம். மேலும் ரயில்வே இணைப்பை மேலும் வலுப்படுத்த இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளோம்.

2015 ஆம் ஆண்டு நாம் வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்ட போது வங்காளதேசத்திற்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்க முடிவெடுத்தோம். இதற்காக வங்காளதேசத்தின் மின் இணைப்பு மேற்கு வங்காளத்தின் உபயோகிக்கப்படுகிறது. இந்த பணிக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக முதல் அமைச்சர் திருமிகு. மம்தா பானர்ஜி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது மூலம், 1.16 கிகாவாட் அளவிலான மின்சாரம் இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு விநியோகிக்கப்படுகிறது. மெகாவாட்டில் இருந்து கிகாவாட்டாக அதிகரித்திருக்கும் இந்த அளவு நமது உறவில் பொற்காலம் மலர்ந்திருப்பதை எடுத்துரைக்கிறது.

ரயில்வே துறையிலும் இந்த இணைப்பு மேம்பட்டுவருகிறது. வங்காளதேசத்தின் உள்நாட்டு போக்குவரத்து மற்றும் இந்தியாவுடனான இணைப்பும் நமது ஒத்துழைப்பு உறவின் முக்கிய அம்சமாகும்.

அகோரா மற்றும் அகர்தலா இடையேயான போக்குவரத்து திட்டம் நிறைவடைந்த பின், நமது எல்லை தாண்டிய இணைப்பில் இன்னொரு இணைப்பு பாதை சேர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக முதல் அமைச்சர் திரு. பிப்லப் குமார் தேவிற்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் நடுத்தர வருவாய் உடைய நாடாகவும் 2041 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாகவும் வங்காள தேசத்தை உயர்த்த வேண்டும் என்று உன்னதமான இலக்கை நிர்ணயித்துள்ளார் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள். இந்த இலக்கை நினைவாக்க உறுதுணையாக நாங்கள் இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.

நமது உறவை மேம்படுத்தி இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள உறவினை வலுப்படுத்துவதன் மூலம் நாம் நமது வளர்ச்சியில் புதிய உயரத்தை அடைந்து வளம்பெறும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்த பணிக்கு ஒத்துழைப்பு அளித்து இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி.

***



(Release ID: 1546506) Visitor Counter : 220


Read this release in: English , Hindi , Marathi , Assamese