விண்வெளித்துறை

இரண்டு வெளிநாடுகளின் செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் -.

Posted On: 16 SEP 2018 11:00PM by PIB Chennai

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 செலுத்து வாகனத்திலிருந்து நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 செலுத்துவாகனம் ராக்கெட் இரவு 10.08 மணிக்கு  புறப்பட்டது. புறப்பட்ட 17 நிமிடம் 44 வினாடியில் செலுத்து வாகனத்திலிருந்து விடுபட்ட இரண்டு செயற்கைக் கொள்களும், பூமியில் இருந்து 583 கிலோ மீட்டர் உயரத்தில் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட.

பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து தனது குழு உறுப்பினர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை 28 நாடுகளைச் சேர்ந்த 239 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

******


(Release ID: 1546345) Visitor Counter : 201
Read this release in: English , Urdu