தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
விஷ்வகர்மா தேசிய விருது மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகள் – 2016 வழங்கும் விழா 2018 செப்டம்பர் 17 அன்று நடைபெறும்
प्रविष्टि तिथि:
14 SEP 2018 12:59PM by PIB Chennai
பணியாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வார் புது தில்லியில் 2018 செப்டம்பர் 17 அன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2016 செயல் ஆண்டுக்கான விஷ்வகர்மா தேசிய விருது மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகளை வழங்குவார்.
முந்தைய ஆண்டின்போது நிர்வாகத்தால் நடைமுறைபடுத்தப்படும் மற்றும் ஓர் ஊழியர் அல்லது ஊழியர்கள் மூலம் அளிக்கப்பட்ட தலைசிறந்த ஆலோசனைகள் அடிப்படையில் விஸ்வகர்மா தேசிய விருது வழங்கப்படுகிறது. பாதுகாப்பு, ஆரோக்கியம், சூழலியல் பேணுதல் போன்ற தரம், உற்பத்தித் திறன் மற்றும் பணிநிலைகள் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 விஸ்வகர்மா தேசிய விருதுகள் ரொக்கப் பரிசாக பாராட்டுச் சான்றிதழுடன் மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் : ரூ.75,000 வீதம் ஐந்து விருதுகள் ‘ஏ’ பிரிவிலும், ரூ.50,000 வீதம் எட்டு விருதுகள் ’பி’ பிரிவிலும், ரூ.25,000 வீதம் பதினைந்து விருதுகள் ’சி’ பிரிவிலும் வழங்கப்படும்.
2016 ஆண்டுக்காக மொத்தம் 128 விருதுகள் வழங்கப்படும்.
ஒவ்வோராண்டும் விஸ்வகர்மா தினமான செப்டம்பர் 17 அன்று விஷ்வகர்மா தேசிய விருது மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
(रिलीज़ आईडी: 1546175)
आगंतुक पटल : 214