பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
எத்தனால் விலை நிர்ணயம் மற்றும் மறு சீரமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2018 4:12PM by PIB Chennai
பி ஹெவி மொலாசஸ் / பகுதி அளவான கரும்புச் சாறு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எத்தனாலுக்கு விலை நிர்ணயம் மற்றும் மறுசீரமைப்புக்கும், 100 சதவீத கரும்புச்சாறு அடிப்படையிலான எத்தனாலுக்கு விலை நிர்ணயம் செய்வதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2018-19-ஆம் ஆண்டு கரும்பு பருவத்திற்கும் 2018 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 2019 நவம்பர் 30-ம் தேதி வரையிலான எத்தனால் விநியோக்கக் காலத்திற்கும் இது பொருந்தும்.
· பி ஹெவி மொலாசஸ் / பகுதி அளவான கரும்புச் சாறு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.52.43 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (தற்போதுள்ள விலை லிட்டருக்கு ரூ.47.13)
· 100 சதவீத கரும்புச்சாறிலிருந்து எத்தனால் தயாரிப்புக்கு லிட்டர் ஒன்றுக்கு விலை ரூ.59.13 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தி செய்யாமல் கரும்புச் சாறு முழுவதையும் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தும் சர்க்கரை ஆலைகள் இந்த பிரிவில் வரும்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1546048)
வருகையாளர் எண்ணிக்கை : 184