புவி அறிவியல் அமைச்சகம்
சுனாமி பயிற்சி ஒத்திகை ஐ.ஓ.வேவ்18 நடத்தப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2018 3:40PM by PIB Chennai
இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் இந்தியாவும் 23 இதர இந்தியப் பெருங்கடல் நாடுகளும் இணைந்து சுனாமி மீட்பு பயிற்சி ஒத்திகை செப்டம்பர் 4ம் தேதி ஈடுபட்டன. ஐ.ஓ.வேவ் 18 என அழைக்கப்பட்ட இந்தப் பயிற்சி யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையிலான கடலியல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்புதான் 2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் மீட்பு முறையை அமைப்பதில் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டது.
இந்தியாவில் ஐ.ஓ.வேவ் 18 கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தால், தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம், தேசிய பேரிடர் பொறுப்பு படை, கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் அந்தமான் தீவுகளில் இருந்து 1000 பேர் அகற்றப்பட்டனர். இதேபோல் மேற்குவங்கத்தில் 1200 பேர் 3 மாவட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இருந்து 5054 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். புதுச்சேரியில் 100 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தில் 9 மாவங்களில் இருந்து 8020 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். ஒடிசாவில் 6 மாவட்டங்களில் இருந்து100000 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் மூத்த ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.கே. நாயக் இந்த பயிற்சியின் கண்காணிப்பாளராக செயல்பட்டு பங்கேற்ற மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான விளைவுகள் குறித்து கேட்டறிந்தார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1545239)
வருகையாளர் எண்ணிக்கை : 209