வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அரசு இ-சந்தை அடுத்த 3 ஆண்டுகளில் 1000 பில்லியன் டாலரை எட்டும்: சுரேஷ் பிரபு

Posted On: 05 SEP 2018 5:29PM by PIB Chennai

Suresh Prabhu speaking during the launch of National Mission on GeM

அரசு இ-சந்தை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் அரசு இ-சந்தைக்கான தேசிய இயக்கத்தை மத்திய தொழில் மற்றும் வர்த்தகம், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இன்று அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் அரசு இ-சந்தையின் பரிவர்த்தனைகள் 1000 பில்லியன் டாலரை எட்டும் என்றார். இந்த இ.சந்தையில் கூடுதல் சுய உதவிக் குழுக்கள், கைவினைஞர்கள் மற்றும் புதிய நிறுவனங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார். மத்திய, மாநில அரசுகள், வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து, செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 17 வரை பயிலரங்குகள், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள், ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் என்றார்.

இந்த தேசிய இயக்கம் அனைத்து மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை இயந்திர கதியில் உள்ளடக்கும். அரசு இ சந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வாங்குவோர் மற்றும் விற்போருக்கு பயிற்சி அளிப்பது, பதிவு செய்வது மற்றும் இந்த சந்தை மூலம் கொள்முதலை அதிகரிப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

***


(Release ID: 1545207) Visitor Counter : 146


Read this release in: English , Marathi