பிரதமர் அலுவலகம்

நேபாளத்திற்குப் புறப்படுமுன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 29 AUG 2018 7:07PM by PIB Chennai

    நேபாள பயணத்திற்குமுன்  பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின்  முழு விவரம்.

 

“நான்காவது பிம்ஸ்டெக்  உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக  ஆகஸ்ட் 30, 31ஆகிய இரண்டு நாட்கள் நான் காட்மாண்டுவில் இருப்பேன்.

 

     இந்த உச்சிமாநாட்டில்  எனது பங்கேற்பு அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கும் உயர் முன்னுரிமை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள  அண்டைநாடுகளுடன் நமது நட்புறவு தொடர்ந்து ஆழமாவதற்கான வலுவான உறுதி ஆகியவற்றை   அடையாளப்படுத்துவதாகும்.

     

இந்த உச்சிமாநாட்டின்போது நமது மண்டலத்தின்  ஒத்துழைப்பை  மேலும் வளப்படுத்தவும், வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் வங்காளவிரிகுடா பகுதியில் அமைதியையும் வளத்தையும் கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும், பிம்ஸ்டெக் அமைப்பின் அனைத்து தலைவர்களுடனும், நான் கலந்துரையாடல் நடத்துவேன்.

 

     “வங்காள விரிகுடா பகுதியில் அமைதி, வளம், நிலையான வளர்ச்சியை நோக்கி” என்ற இந்த உச்சிமாநாட்டின் மையப்பொருள் நமது பொதுவான விருப்பங்களையும், சவால்களையும், வடிவமைக்க கூட்டுப் பொறுப்பை உருவாக்கும்.

 

     பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ், இதுவரை  உருவாக்கப்பட்ட வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், அமைதியான வளமிக்க

வங்காள விரிகுடா பகுதியை கட்டமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கவும், நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

   பிம்ஸ்டெக்  உச்சிமாநாட்டிற்கு இடையே பங்களாதேஷ், பூடான், மியான்மர், இலங்கை, தாய்லாந்து,  ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் நான் பெறுவேன்.

 

   நேபாள பிரதமர் மாண்புமிகு கே பி சர்மா ஒளியை சந்தித்து ஏற்கனவே 2018 மே மாதத்தில்  மேற்கொண்ட எனது நேபாள பயணத்திற்கு பின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் வாய்ப்பையும் நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.

 

பசுபதிநாதர் ஆலய வளாகத்தில் நேபாள பாரத மைத்ரி தர்மசாலாவை தொடங்கி வைக்கும் பெருமையையும், உரிமையையும் பிரதமர் ஒளியும் நானும் பெறுவோம்”

------



(Release ID: 1544495) Visitor Counter : 118