வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஏற்றுமதியை 2025ல் இரு மடங்காக உயர்த்த திட்டம்: சுரேஷ் பிரபு

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2018 5:31PM by PIB Chennai

இந்தியாவின் ஏற்றுமதியை உத்வேகப்படுத்துவது குறித்தும், 2015ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்கச் செய்வது குறித்தும் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்றுமதியாளர்கள், தொழில் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், “உலகளவில் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, கடனுதவி அளிப்பதில் வங்கிகள் காட்டும் கடுமையான அணுகுமுறை, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, உற்பத்தித் திறனில் தரம் ஆகியவற்றால் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே சமயம் ஏற்றுமதியை அதிகரிப்பதால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும், இந்தியாவின் போட்டித் தன்மைக்கு மதிப்பு கூடும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கான பணிகளுக்கு தொழில் வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு. சி.ஆர். சவுத்ரி தலைமை ஏற்பார். அவர் ஏற்றுமதி கவுன்சில்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வார்.

அமைச்சர் பேசுகையில், “சிறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது 54 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மொத்தம் 8 சதவீதம் அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவில் வரும் நவம்பர் மாதம் மெகா இறக்குமதி கண்காட்சி நடைபெறுகிறது. அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை இந்திய  ஏற்றுமதியாளர்கள் தவறவிடக் கூடாது” வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு: www.pib.nic.in

****************


(வெளியீட்டு அடையாள எண்: 1544077) வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English