நிதி அமைச்சகம்

புனேயில் பொருளாதார நிபுணர்களுடன் நிதி ஆணையம் இரண்டாவது ஆலோசனை

Posted On: 22 AUG 2018 9:45AM by PIB Chennai

முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் நிதி ஆணையம் தனது இரண்டாவது ஆலோசனையை 2018 ஆகஸ்ட் 21ம் தேதி புனேயின் யஷ்தாவில் நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாக்டர் விஜய் கேத்கர் உள்ளிட்ட 16 முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு ஆணையத்திடம் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். திட்டம் மற்றும் திட்டமில்லா நிதிகளுக்கு இடையே இருந்த வேறுபாட்டை போக்கவும் பாரம்பரிய முறையான ஆதாரங்கள் ஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றி வந்த திட்டக் கமிஷன் நீக்கப்பட்ட பின்னர் மாறியுள்ள பொருளாதார சூழல் குறித்து நிதி ஆணையத்தின் தலைவர் திரு. என்.கே. சிங் விளக்கினார். பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் வருமாறு:

  1. நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலை ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும்.
  2. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பி.ஆர்.ஐ.களுக்கு நிதி மற்றும் ஆதாரங்கள் வரத்து வலுப்படுத்தப்பட வேண்டும்.
  3. சமத்துவமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் நகர்ப்புறமயமாதல் முறை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  4. மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட சூழல்களைக் கவனத்தில் கொண்டு கடன்/ஜி.டி.பி. விகிதம் மற்றும் நிதி பற்றாக்குறையில் சிறப்பு கவனத்துடன் திருத்தம் செய்யப்பட்ட எஃப்.ஆர்.பி.எம். சட்டம் குறித்து கவனத்துடன் கவனிப்பதற்கான நிதி ஒருங்கிணைப்புத் திட்டம்.
  5. அதிகார பரவலுக்கு சமகால மக்கள் தொகை தகவல் விவரம் பயனுள்ளதாக இருக்கும்.
  6. சமத்துவம் மற்றும் திறனை ஆணையம் சமநிலையுடன் நோக்க வேண்டும்.
  7. மாநிலங்களின் வரி நிர்ணய திறன் மற்றும் அதிகார பரவலுக்கான முறை சமத்துவம், நீதி மற்றும் சமநிலை ஆகியவற்றுடன் உருவாக்கப்பட வேண்டும்.
  8. பல்வேறு திட்டங்களுக்கு ஆதார ஒதுக்கீட்டில் ஒத்திசைவை உறுதிசெய்ய முழுமையான கண்ணோட்டம் மத்திய அரசு திட்டங்களுக்கு தேவை.

பயனாளிகளுக்கு விரும்பத்தக்க ஆதாரங்களை நேர்மையாகவும், எதார்த்தமாகவும் வழங்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அணுகுமுறைகளுக்கு அப்பால், வருவாயை சமஅளவில் பகிர்ந்தளிக்கும் தோராயமான முடிவுக்கு வருவதற்கு முன்னால், அணுகுமுறையில் உறுதியை ஏற்படுத்த, வரும் மாதங்களில் துறைசார்ந்த நிபுணர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்துவது ஆணையத்திற்கு உதவும் என்று விவாதத்திற்குத் தொகுப்புரை வழங்கிய தலைவர் கருதினார்.

பொருளாதார அறிஞர்களுடன் நடத்தப்படும் இரண்டாவது ஆலோசனையாகும் இது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதல் கூட்டத்தில், டி.ஓ.ஆர். தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு 2018 செப்டம்பர் மாதம் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

****



(Release ID: 1543683) Visitor Counter : 144


Read this release in: English , Marathi