பாதுகாப்பு அமைச்சகம்

துடிப்பான விமான தள எதிர்ப்பு ஆயுதங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன

प्रविष्टि तिथि: 19 AUG 2018 7:53PM by PIB Chennai

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வழித் துணையிடப்பட்ட குண்டுகளான துடிப்பான விமான தள எதிர்ப்பு ஆயுதம் சந்தன் சோதனை  தளத்தில் இந்திய விமானப்படையின் விமானத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.  இந்த ஆயுத அமைப்பு உண்மையான குண்டுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு  சோதனையின் போது இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன.  இந்த சோதனையின் அனைத்து நிகழ்வுகளையும் டெலி மெட்ரி மற்றும் பின்தொடர் கண்காணிப்பு அமைப்புகள் பதிவு செய்தன.  மிக துல்லியமான வழித்துணையிடும் அமைப்புகளை கொண்ட இந்த ஆயுதம் தரையில் உள்ள பல்வேறு இலக்குகளை அழிக்கும் திறன் பெற்றது.  2018 ஆகஸ்ட் 16 முதல் 18 வரை பல்வேறு சூழ்நிலைகளில் மொத்தம் 3 சோதனைகள் நடத்தப்பட்டன.  இந்த சோதனைகள் அனைத்தும் தங்கள் நோக்கங்களை சிறப்பாக நிறைவேற்றின.

இதுநாள் வரை இந்த ஆயுதம் 8 மேம்பாட்டு சோதனைகளை கடந்துள்ளது.  இந்த ஆயுத அமைப்பின் செயல்திறன்  பல்வேறு ஏவுதளங்களில் பலதரப்பட்ட செலுத்து சூழ்நிலைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த சோதனைகளின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டிஓ), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

நாட்டின் பாதுகாப்புத் திறன்களை மேலும் உயர்த்துவதற்கான இந்த வெற்றிகரமான சோதனைகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

…………


(रिलीज़ आईडी: 1543427) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu