பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே புதிய நான்கு வழி பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 09 AUG 2018 5:01PM by PIB Chennai

பீகார் மாநிலம் புலாவத் என்னும் இடத்தில் 6.930 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழி பாலம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 106-ல்  பிர்பூர்-பிஹ்பூர் பிரிவில் 106ஆவது கிலோ மீட்டரிலிருந்து 136ஆவது கிலோ மீட்டர் வரை ரூ.1478.40 கோடி மதிப்பில் சாலை கரைகளைப் பலப்படுத்தி சீரமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.  இந்தத் திட்டத்தின் கட்டுமான காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2022 ஜூன் மாத வாக்கில் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                     ******


(रिलीज़ आईडी: 1542449) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi