பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதமரின் உஜ்வாலா திட்டம் 5 கோடி இலக்கை எட்டியது

Posted On: 03 AUG 2018 5:22PM by PIB Chennai

   பிரதமரின் உஜ்வாலா திட்டம் 5 கோடி என்னும் இலக்கை எட்டியுள்ளது. 

   நாடாளுமன்ற வளாகத்தில்,  மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன், இந்தத்  திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் 5-வது கோடி இலவச எரிவாயு இணைப்பை தில்லியைச் சேர்ந்த திருமதி தக்திரன் எனும் பெண்ணுக்கு வழங்கினார். 

   பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு அடிப்படையிலான இந்தத் திட்டத்தை பெரிதும் பாராட்டிய திருமதி சுமித்ரா மகாஜன், பெட்ரோலியத்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் உதவியுடன்  5 கோடி என்னும் இந்த மாபெரும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

  பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016-ம் ஆண்டு மே முதல் தேதி அன்று பிரதமர் திரு மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தால் எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட இருபத்தெட்டே மாதங்களில் 5 கோடி இலக்கை எட்டியுள்ளது.    இந்தத் திட்டத்தின் பெரும் வெற்றியை அடுத்து, இலக்கு 8 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.12,800 கோடியாகும்.



(Release ID: 1541641) Visitor Counter : 223


Read this release in: English , Marathi