சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்விக்கான உதவித் தொகை ஒதுக்கீடு
Posted On:
31 JUL 2018 1:12PM by PIB Chennai
ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு பிந்தைய படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை, பல்வேறு தரப்பினருக்கு, இரண்டு விதமான திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள் இடையிலான ஆலோசனை, நிதி ஒதுக்கீடு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்பின் ஒப்புதல் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு, குறிப்பிட்ட கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. மெட்ரிக் கல்விக்கு பிந்தைய படிப்பை பயிலும் ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய - மாநில அரசுகள் முறையே, 75-க்கு 25 சதவீத அடிப்படையில் பகிர்ந்து வழங்கி வருகின்றன.
மக்களவையில் இன்று (31.07.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு. விஜய் சாம்ப்லா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.
(Release ID: 1540920)
Visitor Counter : 155