சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மனித கழிவுகளை அகற்றுவோருக்கான மறுவாழ்வு

Posted On: 31 JUL 2018 1:12PM by PIB Chennai

மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பவர்களின் மறுவாழ்வுக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மத்திய அரசின் திட்டமான சுய வேலை வாய்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் கீழ் அடையாளம் காணப்பட்ட மனிதக்கழிவுகளை அகற்றும் நபர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்போருக்கு கீழ்க்காணும் மறுவாழ்வு பயன்கள் அளிக்கப்படுகிறது:

 

  1. ஒரே சமயத்தில் ரூ. 40,000 நிதி உதவி.
  2. சலுகை வட்டி விகிதத்தில் ரூ. 15.00 லட்சம் வரை கடன்.
  3. ரூ. 3,25,000 வரை பின்புற மூலதன மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன்.
  4. மாதம் ரூ. 3000 ஊக்கத்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் வரை திறன் மேம்பாட்டு பயிற்சி.

 

மெட்ரிக்கிற்கு முந்தைய கல்வி ஊக்கத்தொகை திட்டம் என்ற தலைப்பிலான திட்டம் ஒன்றை அமைச்சகம் தூய்மை பணி மற்றும் ஆரோக்கிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் பணிகளின் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் மனிதர்களின் குழந்தைகளும் இந்த கல்வி ஊக்கத்தொகை பெற தகுதியுடையோர் ஆவர்.

 

30.05.2018 வரை 13 மாநிலங்கள் 13,657 பேரை அடையாளம் கண்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியாக 30.06.2018 வரை அடையாளம் காணப்பட்டவர்கள்

 

 

வ.எண்

மாநிலம்/யூனியன் பிரதேச பெயர்

மனித கழிவை அகற்றும் மனிதர்களின் எண்ணிக்கை

01

தமிழ்நாடு

363

 

இதர மாநிலங்கள்

13294

 

 

 

 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. ராம்தாஸ் அதவாலே இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.

 

*****(Release ID: 1540847) Visitor Counter : 278


Read this release in: English , Urdu