பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஊழியர்களின் பணி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2018 1:55PM by PIB Chennai
உச்ச நீதிமன்றம் 2018 மே 17 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் மே 17ம் தேதியிட்ட அலுவலகக் குறிப்பின்படி (எண் 36012/11/2016- Estt.(Res-I) {Pt-II} ) இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின்படி தற்போதைய பணி மூப்பு, தேர்வுப் பட்டியல்படி பணி உயர்வை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றம் அடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவு வரையில் செயல்படுத்தப்படலாம். மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுப்படி இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இத்தகவல்களை மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று (26.7.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1540270)
வருகையாளர் எண்ணிக்கை : 250