விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயக் கடன் தள்ளுபடி

प्रविष्टि तिथि: 24 JUL 2018 3:54PM by PIB Chennai

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடனைத் தள்ளுபடி செய்து கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இருப்பவர்களையும் கூட கடனைத் திருப்பி செலுத்தாதவர்களை ஊக்குவிப்பதுடன், கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களை ஊக்கமிழக்கச் செய்து பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதால் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு இப்போதைக்கு பரிசீலிக்கவில்லை. மேலும் இவ்வாறு அளிக்கப்படும் கடன் தள்ளுபடிகள் எதிர்காலத்தில் வரும் இதுபோன்ற கோரிக்கைகளை நிராகரிக்கப்படுவதை மேலும் கடினமாக்குகின்றது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை சமீபத்தில் தேவைப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தங்களது வேளாண் கடனைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி விவரங்கள் இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளபடி.

வ.எண்

மாநிலம்

விவரங்கள்

1.

தமிழ்நாடு

2016 மே 23ம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 50 மூலம் தமிழ்நாடு அரசு நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் அளிக்கப்பட்ட பயிர்க்கடன், எம்.டி. வேளாண் மற்றும் எல்.டி. (வேளாண் துறை)  கடன்கள் நிலுவை 2016 மார்ச் 31ம் தேதிப்படி தள்ளுபடி செய்யப்படுகிறது.1202075 விவசாயிகளுக்கு  ரூ.5318.75 கோடி தள்ளுபடி.

 

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற தலைதளத்தைப் பார்க்கவும்.


(रिलीज़ आईडी: 1540004) आगंतुक पटल : 849
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali