நிதி அமைச்சகம்

பினாமி சொத்துக்கள் அடையாளம் காணுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2018 4:01PM by PIB Chennai

பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்பு சட்டம் 1988 பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்த சட்டம் 2016 ஆக திருத்தம் செய்யப்பட்டு பினாமி சொத்துக்கள் எந்த வகையில் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் பினாமி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கிறது.

 

30.06.2018 வரை ரூ. 4300 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்படும் பினாமி சொத்துக்களை உள்ளடக்கிய 1600 பினாமி பரிவர்த்தனைகள் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

பினாமி சொத்துக்களை அடையாளம் காண இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 24 அர்ப்பணிக்கப்பட்ட பினாமி தடுப்பு பிரிவுகளை வருமான வரித்துறை அமைத்துள்ளது.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் நிதித் துறை இணையமைச்சர் திரு சிவ பிரதாப் சுக்லா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

****


(வெளியீட்டு அடையாள எண்: 1539945) வருகையாளர் எண்ணிக்கை : 495
இந்த வெளியீட்டை படிக்க: English