வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை போக்குவரத்துப் பாதை

Posted On: 23 JUL 2018 1:16PM by PIB Chennai

 விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை போக்குவரத்துப் பாதை (விசிஐசி) திட்ட வரைவில் (i) விசாகப்பட்டினமும் (ii) எற்பேடு-ஸ்ரீகாளகஸ்தியும் இரு முனையங்களாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகவலை இன்று (23.07.2018) மக்களவையில் மத்திய தொழில், வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு.சி.ஆர். சவுத்ரி எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

திட்ட வரைவு, விரிவான ஆரம்பநிலை பொறியியல் பணிகள் மற்றும் மத்திய அரசின் தேசிய தொழில்துறை போக்குவரத்துப் பாதை மேம்பாடு மற்றும் அமலாக்கப் பொறுப்புக் கழகம் ஆகியவற்றிற்கு ஒப்புதல் கிடைத்த பின், தொழில்துறை போக்குவரத்துப் பாதை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படும்.

விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை போக்குவரத்துப் பாதை (விசிஐசி)-க்காக பலவகை நிதி வசதியை உள்ளடக்கி, கடனாகவும் மானியமாகவும் 631 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

  1. முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இரண்டு நிலைகளில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்
  2. மாநிலத்தில் கொள்கை சீர்திருத்தங்கள் ஆதரவு மற்றும் அமைப்பு சார்ந்த மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க கொள்கை அடிப்படையிலான கடன் (பிபிஎல்), 125 மில்லியன் அமெரிக்க டாலர்
  3. விசாகப்பட்டினத்தில் பருவநிலை மாற்றத்திற்கேற்ப, நெகிழ்ச்சியுள்ள அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க பலதரப்பு  உதவிபெற்ற, நகர்ப்புற, பருவநிலை மாற்ற அறக்கட்டளை நிதியத்திலிருந்து (யுசிசிஆர்டிஎஃப்) நிதியாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  4. ஆந்திரப் பிரதேச அரசு, கொள்கை சீர்திருத்தங்களை அமல் செய்வதற்கு உதவியாக தொழில்நுட்ப உதவி 1 மில்லியன் அமெரிக்க டாலர்.

ஆசிய வளர்ச்சி வங்கியால் தயாரிக்கப்பட்ட திட்டக் கருத்துரு அடிப்படையில், விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை போக்குவரத்துப் பாதை மேம்பாட்டிற்கு ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம், காக்கிநாடா, காங்கிப்பாடு-கன்னவரம், எற்பேடு-ஸ்ரீகாளகஸ்தி ஆகிய நான்கு முனையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

--------------



(Release ID: 1539679) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi