ரெயில்வே அமைச்சகம்

ரெயில்வேக்களில் பெண்களுக்கு அவசரகால பேசும் வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகள்

Posted On: 20 JUL 2018 4:49PM by PIB Chennai

மும்பை புறநகர்  மின்சார ரெயில்கள் இரண்டில் 3 பெட்டிகள் வீதம் மொத்தம் 6 மகளிர் பெட்டிகளில் அவசர கால பேச்சுத் தகவல் வசதி செய்யப்பட்டுள்ளது மும்பை புறநகர் ரயிலின் குளிர் சாதனா வசதி கொண்ட ஒரு பெட்டியிலும் இந்த அவசர கால பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது. மும்பை ரெயில்வே மேம்பாட்டுக் கழகத்தின் மும்பை நகர்ப்புற போக்குவரத்துத் திட்டத்தின் 3-வது கட்டத்தில் புதிதாக உற்பத்திச் செய்யப்படும் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் இந்த அவசர கால பேச்சு வசதி இணைக்கப்பட உள்ளன.

     2018 ஆம் ஆண்டினை மகளிர் பாதுகாப்பு ஆண்டாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் இந்திய ரெயில்வே துறை கண்காணிப்பு கேமராக்கள் புறநகர் ரெயில்களில் மகளிர் பெட்டிகளில் பொருத்துதல், ரெயில் வண்டிகள் ரெயில் நிலையங்களில் நிற்கும் போது பெண்கள் பெட்டிகளை கண்காணிக்கும் வகையில் நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல். இரவு நேரங்களில் புறநகர் ரெயில்களில் பெண் காவலர்களை பணியில் அமர்த்துதல், பெரு நகரங்களில் இயங்கும் அனைத்து மகளிர் சிறப்பு ரெயில்களிலும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நியமித்தல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

     அகில இந்திய பாதுகாப்பு அவசர உதவி தொலைபேசி சேவை 182 ரூ.5,59,000 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவையை பயணியருக்கு உகந்ததாக மாற்றும் வகையில் இது செயலி ஒன்றுடன் இணைக்கப்பட உள்ளது. இத்தகைய ரெயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர கால தொலைபேசி எண்கள் ஆகியவை குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மண்டல ரெயில்வேக்கள் விளம்பரத் திட்டங்களை மேற்கொண்டுள்ளன.  இதற்கு போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள், கைப்பிரதிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர காட்சி/ கேள்வி விளம்பரங்கள், பொதுமக்கள் இயக்கங்கள், ரெயில்வே அறிவிப்புகள் ஆகியவற்றின் மூலமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.



(Release ID: 1539516) Visitor Counter : 138


Read this release in: English , Marathi , Bengali