பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

உத்தரப் பிரதேச மாநிலம், தேவரியாவில் சேலம்பூர் மருத்துவக் கல்லூரியை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:14PM by PIB Chennai

மத்திய நிதியுதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் ரூ. 250 கோடி செலவில் தேவரியாவில் புதிய மருத்துவக் கல்லூரியை நிறுவ உத்தரப்பிரதேச மாநில அரசு அளித்துள்ள  முன்மொழிவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய நிதியுதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ்,  தற்போதைய மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ ஒவ்வொரு மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் ஒவ்வொரு மாநிலத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றும் அமைப்பதான அடிப்படை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் எட்டு மருத்துவமனைகள் உட்பட 24 கூடுதல் மருத்துவமனைகளுக்கான கோரிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட எட்டு தொகுதிகளில்,  தொகுதி – 6, (70) கோஷி, (71) சேலம்பூர், (72) பாலியா நாடாளுமன்றத் தொகுதிகள் அடங்கியது. தேவரியாவின் மாவட்ட மருத்துவமனையை மேம்படுத்துவதன் மூலம் தாரியாவில் சலேம்பூர் மருத்துவக்கல்லூரிகளை நிறுவுமாறு உத்தரப் பிரதேச மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது.  

தேவரியா மாவட்டம் மற்றும்  சேலம்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் பகுதியான சலேம்பூர், தாரியா மாவட்டத்தின் கீழான ஒரு பகுதியை உள்ளடக்கியது. தாரியா மாவட்ட மருத்துவமனையும்,  போதுமான எண்ணிக்கையிலான படுக்கைகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளின் படி நிலம் கிடைப்பது உள்ளிட்ட பிற வசதிகளும் கொண்டதால் அடையாளம் காணப்பட்ட அனைத்துச் சாத்தியப்பட்ட இடங்களில் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கு ஏற்றதாகும்.   


                                                                             *****


(Release ID: 1539448)
Read this release in: English , Marathi