பிரதமர் அலுவலகம்

புதிய இந்தியா பற்றிய கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

Posted On: 16 JUL 2018 10:48PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற புதிய இந்தியா பற்றிய கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை.

நாடு ஒரு மாற்றத்திற்கான காலகட்டத்தைக் கடந்து வருவதாக பிரதமர் கூறினார். உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்று கூறிய பிரதமர், ஒரு சர்வதேச அறிக்கையின்படி என்றும் இல்லாத வேகத்தோடு இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாக கூறினார். அரசு இதற்கு வழிவகுத்துத் தருகிறது, ஆயின் இளைஞர்கள் தாம் வாய்ப்புக்களை பயன்படுத்துவதோடு அன்றி புதிய வாய்ப்புக்களையும் உருவாக்கி வருகின்றனர் என்றார்.

இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் அவர்களது வலிமையைப் போன்றே இந்தியா பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து வருகிறது என்றார் பிரதமர். இதற்கான ஆதாரங்களை எடுத்துக் கூறிய பிரதமர், 3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது; 4 ஆண்டுகளில் 1.75 லட்சம் கிலோ மீட்டர் கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது; ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதி சென்று சேர்ந்திருப்பது; 2017 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 85 லட்சம் இல்லங்கள் மின்சார வசதி பெற்றிருப்பது; ஏழைகளுக்கு 4.65 கோடி சமையல் எரிவாயு இணைப்புக்கள் சென்று சேர்ந்திருப்பது மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 1 கோடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பது போன்ற உதாரணங்களைக் குறிப்பிட்டார். 35 வயதுக்கு உட்பட்ட 800 மில்லியன் இளைய சக்திகளால்தான் இந்தப் பெரிய எண்ணிக்கை சாத்தியமாகியிருக்கிறது.

நாட்டில் இன்று மிகவும் சாதாரணப் பின்னணியில் இருந்து உயர்ந்த பல தலைவர்களின் எடுத்துக்காட்டுக்களை மேற்கோள் காட்டினார் பிரதமர். புதிய இந்தியாவின் இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்தப் புதிய சூழல், அரசியல் தொடர்பானது மட்டும்  அல்ல. கிராமப் பின்னணி மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் தற்போது உயர் நிர்வாகத் துறைகளில் இருக்கின்றனர். ஹிமாதாஸ் போன்று பலர் விளையாட்டுக்கான தங்கப்பதக்கங்களை நாட்டுக்காக வென்று,  புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

“எதுவும் சாத்தியமே! எல்லாமும் சாதிக்கக் கூடியதே” என்று இளைய இந்தியா நினைப்பதாக பிரதமர் கூறினார்.

தற்போது, பள்ளங்களுக்கு மாற்றாக தீர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக பிரதமர் கூறினார். நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கே முக்கியத்துவம் தரப்படுவதாக அவர் தெரிவித்தார். பாரத் மாலா, சாகர் மாலா, முத்ரா, நிமிர்ந்து நில் இந்தியா மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்கள் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார். அரசு புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவதாக அவர் மேலும் கூறினார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் வளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் உறுதிபடக் கூறினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களின் சக்தியும், துணிவும் கொண்டு முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் கூறினார். புதிய இந்தியாவை உருவாக்குவதில் இதே பங்களிப்பை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வழிமுறைகள் மீது மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வளர்ச்சியை வழிநடத்தும் வழிமுறைகளே புதிய இந்தியாவில் காணப்படும் என்றார் அவர்.



(Release ID: 1538836) Visitor Counter : 153