குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடைமையும் வழிகாட்டு நெறிகளாக வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 12 JUL 2018 1:21PM by PIB Chennai

பொதுமக்கள் நலனுக்குப் பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் வழிகாட்டு நெறிகளாக அமைய வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு  வலியுறுத்தினார்.

மத்திய பொதுப்பணித் துறை தினத்தின் 164வது ஆண்டு விழா இன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு பேசினார். நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், நகர்ப்புற மேம்பாட்டில் மத்திய பொதுப்பணித் துறைக்கு (CPWD) பெரிய பங்களிப்பு உள்ளது. நகரங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது, இயற்கைச் சூழலை மனத்தில் வைத்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். மத்தியப் பொதுப்பணித் துறை (CPWD) அதிக அளவில் கட்டுமான திட்டங்களை ஏற்று நிறைவேற்றுவதற்கு உண்மையாகப் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற வேண்டும். அவற்றுடன், சிறந்த எதிர்காலம் அமைவதற்காக நமது இயற்கை, கலாசாரம், கட்டடக் கலை ஆகிய மூன்றையும் காக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

இந்திய நகரங்கள் மறுமலர்ச்சி பெற்று வருகின்றன என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் உலகமே ஈர்க்கப்பட்டு வருகிறது. நம் நாடு உலகிலேயே வேகமாக பொருளாதார வளர்ச்சி காணும் நாடு என்ற நிலையை அடைந்திருப்பது நமக்கு பெரும் மன நிறைவைத் தருவதாகும் என்றும் கூறினார்.

***



(Release ID: 1538460) Visitor Counter : 132


Read this release in: English , Marathi