நிதி அமைச்சகம்

வரி வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்பட்ட பெரிய நடவடிக்கைகள்

Posted On: 11 JUL 2018 5:52PM by PIB Chennai

  வரி செலுத்துவோரின் நீண்டகால நிலுவையில் உள்ள குறைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், வரி தொடர்பான வழக்குகளை குறைக்கவும், வர்த்தகம் புரிதலில் எளிமையை கொண்டு வருவதில் உதவவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு நிலைகளில் அதாவது, மேல்முறையீட்டு நடுவர் மன்றங்கள், உயர்நீதி மன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் துறை சார்ந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்வதற்கான பண வரம்பை, மத்திய அரசு கீழ்கண்டவாறு உயர்த்தியுள்ளது.

 

வ.எண்

முறையீட்டு அமைப்பு

தற்போதுள்ள முறையீட்டு தாக்கல் வரம்பு(ரூபாய்களில்)

உயர்த்தப்பட்ட வரம்பு (ரூபாய்களில்)

1.

ITAT / CESTAT ஆகிய மேல்முறையீட்டு நடுவர் மன்றங்கள்

10 லட்சம்

20 லட்சம்

2.

உயர்நீதிமன்றங்கள்

20 லட்சம்

50 லட்சம்

3.

உச்சநீதிமன்றம்

25 லட்சம்

1 கோடி

நேரடி மற்றும் மறைமுக வரிகள் சார்ந்த வழக்கு மேலாண்மையை கட்டுப்படுத்துவதற்கான இந்த முக்கிய நடவடிக்கை காரணமாக சிறிய வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும். அதிக மதிப்புள்ள வழக்குகளின்பால் துறையின் கவனம் திரும்ப உதவும்.

  இந்த நடவடிக்கை துறை சார்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துவிடும்.

==================



(Release ID: 1538415) Visitor Counter : 104


Read this release in: English