பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2022-க்குள் உயர் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி

Posted On: 04 JUL 2018 2:21PM by PIB Chennai

   பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2022-க்குள் உயர் கல்வித் துறையில் கட்டமைப்பு வசதி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த ஏதுவாக, உயர் கல்வி நிதியுதவி முகமையின் முதலீட்டை ரூ.10,000 கோடி அளவுக்கு உயர்த்தி, ரூ.1,00,000 கோடி திரட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.

விவரம்:

  2014-க்கு பிறகு ஏற்படுத்தப்பட்டு, குறைவான  சொந்த நிதி ஆதாரங்களை கொண்ட மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயா போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள் / பள்ளிக் கல்வி நிறுவனங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக, உயர் கல்வி நிதியுதவி அமைப்பின் மூலமாக கீழ்காணும் ஐந்து வழிமுறைகளுக்கும் கடன் தொகையின் அசலை திருப்பிச் செலுத்துவதற்குமான(வட்டித் தொகை அரசு வழங்கும் நிதி மூலமாக ஈடுசெய்யப்படும்) நடைமுறைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

  1. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்: அந்தந்த அமைப்புகளால் திரட்டப்படும் பட்ஜெட் நிதி ஆதாரங்கள் மூலமாக, அசல் தொகை முழுவதையும், திருப்பிச் செலுத்துதல்.
  2. 2008 முதல் 2014 வரை தொடங்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்: அசல் தொகையில் 25 சதவீதத்தை  சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவும், எஞ்சிய அசல் தொகையை அரசிடமிருந்து பெறும் நிதி மூலமாகவும் திருப்பிச் செலுத்தவேண்டும்.

மத்திய பல்கலைக்கழகங்கள்

  1. 2014-க்கு முன்பாக ஏற்படுத்தப்பட்டவை:  அசல் தொகையில் 10 சதவீதத்தை சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவும், எஞ்சிய தொகையை அரசிடமிருந்து பெறும் நிதி மூலமாகவும், திருப்பிச் செலுத்தவேண்டும்.
  2. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள்(2014-க்கு பிறகு ஏற்படுத்தப்பட்டவை): நிரந்தர வளாகங்கள் கட்டுமானப் பணிக்கு நிதி அளித்தல்: அசல் மற்றும் வட்டி உள்ளிட்ட ஒட்டுமொத்த கடனுக்கான நிதி அரசு நிதியுதவியாக வழங்கப்படும்.
  3. இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள்:  புதிதாக அமைக்கப்படும் அனைத்து எய்ம்ஸ் மற்றும் இதர மருத்துவக் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா / நவோதயா வித்யாலயா ஆகியவற்றுக்கு  தொடர்புடைய துறை / அமைச்சகம், அசல் மற்றும் வட்டித்  தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு உரிய நிதியை வழங்குவதை உறுதிசெய்யும்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.  

                                            ===============



(Release ID: 1537729) Visitor Counter : 177


Read this release in: English , Marathi , Bengali