தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய “cVIGIL” என்னும் செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது

Posted On: 03 JUL 2018 5:41PM by PIB Chennai

தேர்தல்களின் போது நடைபெறும் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ஏதுவாக, “cVIGIL”  எனப்படும் செல்போன் செயலியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஓ. பி. ராவத், தேர்தல் ஆணையர்கள் திரு. சுனில் அரோரா, திரு. அசோக் லவாசா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சிவிஜில்  எனப்படும் செல்போன் செயலி எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்டு செயலியாகும். தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது மட்டும் இது இயங்கும். இருப்பினும், செயலியின் பீட்டா பதிப்பு பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். தேர்தல் பணியாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்து அதன் அம்சங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மாதிரி தரவுகளை அனுப்புவார்கள்.

இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கேமரா, நல்ல இணையதள இணைப்பு, ஜி.பி.எஸ் அணுக்கத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் அவசியமாகும். இதன் இயக்கு முறைக்கு அதிநவீன ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் மற்றும் அதற்கு மேலான பதிப்பாக  இருப்பது அவசியம். அனைத்து அதி நவீன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களிலும் இந்த செயலி செயல்படும்.

 

                                                 ******



(Release ID: 1537510) Visitor Counter : 260


Read this release in: English , Marathi , Bengali