பாதுகாப்பு அமைச்சகம்
கார்கில் வெற்றி நாளையொட்டி இந்திய ராணுவம் நடத்திய இருசக்கர வாகன சிறப்பு பயணம்
प्रविष्टि तिथि:
03 JUL 2018 9:29AM by PIB Chennai
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் கண்ட வெற்றியை குறிக்கும் வகையில் ராணுவ காவல்படையின் இருசக்கர வாகன குழுவான “ஸ்வேத் அஷ்வ்” நடத்திய சிறப்பு பயணம் பெங்களூரில் நேற்று கொடியசைத்து பெங்களூரில் துவக்கிவைக்கப்பட்டது. 3,250 கிலோமீட்டர் தூரம் வரை நீளும் இந்தப் பயணம், 24 நாட்களில் 8 மாநிலங்களைக் கடந்து, வரும் 26 ஆம் தேதியன்று ஜம்மு-கஷ்மீர் மாநிலம் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் முடிவடையும்.
“ஸ்வேத் அஷ்வ்” குழு 1952 ஆம் ஆண்டு ஃபைஸாபாதில் உள்ள ராணுவ காவல்படை மையம் மற்றும் பள்ளியில் தொடங்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் மூன்று முறை இடம்பெற்றுள்ளது. இந்த இரு சக்கர வாகன சிறப்பு பயணம் வரும் 26 ஆம் தேதியன்று திராஸில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் நடைபெறும் கார்கில் வெற்றி நாள் கொண்டாட்டங்களில் கொடியசைத்து வரவேற்கப்படும். சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவது, கார்கில் போரில் நாட்டிற்காக மிக உயரிய தியாகத்தை செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மற்றும் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்துவது ஆகியவையே இந்த இரு சக்கர வாகன சிறப்பு பயணத்தின் நோக்கமாகும்.
(रिलीज़ आईडी: 1537432)
आगंतुक पटल : 140