ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம்

Posted On: 27 JUN 2018 3:42PM by PIB Chennai

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியாவும் இந்தோனேசியாவும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2018 மே 29ம் தேதி செய்து கொள்ளப்பட்டது.

 

கீழ்க்காணும் முக்கிய பகுதிகளில் கண்ணோட்டம் சார்ந்த அணுகுமுறைக்கான ஒத்துழைப்பு கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அளிக்கும்:

 

அ. அறிவாற்றல், தொழில்நுட்பம், திறன் உருவாக்கம் உள்ளிட்ட நிறுவன ஒத்துழைப்பு பரிமாற்றம்

ஆ. சுழற்சி பொருட்கள் மற்றும் சிக்னல் மற்றும் தொடர்பு அமைப்புகள் நவீனமயம்

இ. ரயில்வே செயல்பாடு, நிர்வாகம் மற்றும் வரன்முறைகள் நவீனமயம்;

ஈ. இண்டர் மாடல் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் மற்றும் சரக்கு முனையங்கள்

உ. ரயில்பாதை, பாலங்கள், சுரங்கப்பாதை, மின்மயம் மற்றும் மின் விநியோக அமைப்புகள் உள்ளிட்ட நிலையான உள்கட்டமைப்பு கட்டுமான மற்றும் நிர்வாக தொழில்நுட்பங்கள் பரிமாற்றம்

ஊ. இருதரப்பும் கூட்டாக முடிவு செய்யும் ஒத்துழைப்புக்கான இதர பகுதிகள்

 

பின்னணி:

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வெளிநாட்டு அரசுகளுடனும் மற்றும் தேசிய ரயில்வேக்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது. உயர்வேக வழித்தடங்கள், தற்போதுள்ள ரயில்களின் வேகம் அதிகரிப்பு, உலகத் தரமான ரயில் நிலையங்கள், அதிக சுமை செயல்பாடுகள் மற்றும் ரயில் உள்கட்டமைப்பு நவீனமயம் உள்ளிட்ட பகுதிகள் ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. ரயில்வே தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்ட பகுதிகள் குறித்த தகவல் பரிமாற்றம், அறிவாற்றல் பகிர்வு, தொழில்நுட்ப விஜயங்கள், பயிற்சி மற்றும் கருத்தரங்குகள் மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட பகுதிகளில் பயிலரங்குகள் மூலம் ஒத்துழைப்பு எட்டப்படும்.


(Release ID: 1536795) Visitor Counter : 155


Read this release in: English , Telugu , Kannada