நித்தி ஆயோக்

கலப்பு நீர் மேலாண்மை குறியீடு குறித்த அறிக்கை வெளியீடு

Posted On: 14 JUN 2018 1:46PM by PIB Chennai

ஆக்கப்பூர்வமான, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை செயல்படுத்த நித்தி ஆயோக் பல்வேறு சமூகத் துறைகளில் குறியீடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. 2018 பிப்ரவரி மாதம் “ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேற்றமான இந்தியா” என்ற தலைப்பில்  நித்தி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார கட்டளவுகளைக் கொண்டதாகும். இதில் ஒருபடி மேலே சென்று மனித வாழ்வுக்குத் தேவையான தண்ணீரின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு கலப்பு நீர் மேலாண்மை குறியீடு குறித்த அறிக்கையை நித்தி ஆயோக் தயாரித்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை கப்பல்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி நித்தி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர். ராஜீவ் குமார் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். நித்தி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த், நீர்வளத்துறை, குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2016-17-ஆம் ஆண்டில் இந்தத் துறையில் குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.

                                ******

 

 


(Release ID: 1536593) Visitor Counter : 112
Read this release in: English , Hindi