பிரதமர் அலுவலகம்

செஷல்ஸ் அதிபரின் இந்திய வருகையின் போது இந்தியா – செஷல்ஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUN 2018 4:37PM by PIB Chennai

வ.

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தம் / உடன்படிக்கை

இந்திய தரப்பு

செஷல்ஸ் பிரதிநிதி

1

இந்திய குடியரசு மற்றும் செஷல்ஸ் குடியரசுகளுக்கு இடையே, உள்ளாட்சி அமைப்புகள் கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள சிறிய வளர்ச்சித் திட்டங்களுக்கான இந்திய நிதியுதவி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திரு.எம்..ஜே. அக்பர், வெளியுறவுத் துறை இணையமைச்சர்

திருமதி. பமிலா சார்லட், வாழ்விட கட்டமைப்பு மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

2

பனாஜி மாநகராட்சி மற்றும் செஷல்ஸ் குடியரசின் விக்டோரியா மாநகரம் இடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான இரட்டை உடன்படிக்கை.

திரு.எம்..ஜே. அக்பர், வெளியுறவுத் துறை இணையமைச்சர்

திருமதி. பமிலா சார்லட், வாழ்விட கட்டமைப்பு மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

3

இந்திய குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின், இந்திய கணினி அவசர கால நடவடிக்கைக் குழு மற்றும் செஷல்ஸ் குடியரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இடையே, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திரு.எம்..ஜே. அக்பர், வெளியுறவுத் துறை இணையமைச்சர்

திரு. சார்லஸ் பாஸ்டியன், மீன்வளம் மற்றும் வேளாண் துறை அமைச்சர்

4

இந்திய குடியரசு மற்றும் செஷல்ஸ் குடியரசுகளுக்கு இடையே 2018 – 2022 ஆண்டுகளில் கலாச்சார பரிவர்த்தனை திட்டம்.

திரு.எம்..ஜே. அக்பர், வெளியுறவுத் துறை இணையமைச்சர்

திருமதி. பமிலா சார்லட், வாழ்விட கட்டமைப்பு மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

5

இந்திய கடற்படை மற்றும் செஷல்ஸ் குடியரசின் தேசிய தகவல் பரிமாற்ற மற்றும் ஒருங்கிணைப்பு மையம் இடையே வெண்மை கப்பலியல் தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப உடன்படிக்கை

திரு.எம்..ஜே. அக்பர், வெளியுறவுத் துறை இணையமைச்சர்

திரு. சார்லஸ் பாஸ்டியன், மீன்வளம் மற்றும் வேளாண் துறை அமைச்சர்

6

இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சகத்தின், வெளியுறவு பயிற்சி நிறுவனத்திற்கும், செஷல்ஸ் குடியரசின் வெளியுறவுத் துறை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திரு. ஜே.எஸ்.முகுல், முதல்வர், வெளியுறவுப் பணி பயிற்சி நிறுவனம்

ஆம்ப். பாரி ஃபரே, வெளியுறவுத் துறை செயலாளர்

(வெளியீட்டு அடையாள எண்: 1536521) வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Assamese , Malayalam