நீர்வளத் துறை அமைச்சகம்
வெள்ள முன்னெச்சரிக்கைக்காக கூகுள் நிறுவனத்துடன் அரசு இணைந்து செயல்படும்
Posted On:
18 JUN 2018 7:03PM by PIB Chennai
இந்தியாவில் திறன்மிக்கவெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் இணைந்து செயல்படும் என்று மத்திய நீர்வளத்துறை, நதி மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் துறை இணைந்து செயல்படும் என்று திரு. நிதின் கட்கரி கூறினார். மத்திய நீர்வள ஆணையம் (cwc), நீர் வளத்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப அமைப்பாகும். கூகுள் நிறுவனத்துடன் இந்த ஆணையம் ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் மற்றும் புவிவெப்பமாகுதல் வரைபடம் ஆகியவற்றில் கூகுள் நிறுவனம் உருவாக்கிய அதிநவீன முன்னேற்றங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. குறிப்பாக வெள்ள நிவாரணம் மற்றும் வெள்ளம் தொடர்பான தகவல்களை இதன் மூலம் அறியலாம். இந்த முயற்சியின் மூலம் இடர் மேலாண்மை முகமைகள் தீவிரமான நீர்வழி நிகழ்வுகளை சிறந்த முறையில் சமாளிக்க உதவும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் கற்றல், புவி வெப்பமயல் வரைபடம், நீரியல் கண்காணிப்பு ஆகியவற்றில் தனது தொழில்நுட்பத்தை கீழ்கண்ட துறையில் பகிர்ந்து கொள்கின்றன. (1) வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்டறியும் அமைப்புகளை மேம்படுத்துவதுடன் இது இலக்கை சுட்டிக்காட்டக்கூடிய வெள்ள எச்சரிக்கைகளை வழங்க உதவுகிறது. (2) வெள்ளப் பெருக்கினை உருவப்படுத்தவும் வெள்ள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக கூகுள் எர்த் என்ஜின் என்ற மென்பொருளை பயன்படுத்தி உயர் முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் (3) இந்தியாவின் நதி திட்டங்களை விளக்கும் தேசிய அளவிலான கண்காட்சியை உருவாக்குவதற்கான கலாச்சார திட்டத்தை ஏற்படுத்த உதவும்..
(Release ID: 1535937)
Visitor Counter : 167