குடியரசுத் தலைவர் செயலகம்

ஏதென்சில் வெளியுறவுக் கொள்கை சிந்தனையாளர்களிடையே இந்திய குடியரசுத்தலைவர் உரை

Posted On: 19 JUN 2018 2:53PM by PIB Chennai

   இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், ஏதென்சில் இன்று ( ஜூன் 19, 2018) ராஜீய அதிகாரிகள், கொள்கை வகுப்பவர்கள், கல்வியாளர்கள் நிறைந்த கூட்டத்தில், “மாறி வரும் உலகில் இந்தியா, மற்றும் ஐரோப்பா” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஐரோப்பாவிலும். கிரீஸிலும் உள்ள வெளியுறவுக் கொள்கை சிந்தனையாளர்களைக் கொண்ட ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைக்கான ஹெலனிக் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    உலக அமைதிக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர்  தெரிவித்தார்.  சச்சரவுகள் இல்லாத நிலையில் இந்தியா, அமைதியை காண்பதாக  கூறஇயலாது என்று தெரிவித்த அவர், இது நீடித்த வளர்ச்சியின் பிரதிபலிப்பு என்றார். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நாம் உழைக்கும் போது உலக அமைதிக்கு நாம் பங்களிக்கிறோம். இதர வளரும் நாடுகளுக்கு அவர்களின் முன்னுரிமைக்கு ஏற்ப உதவும் போது உலக அமைதிக்கு நாம் பங்களிக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நமது சொந்த குடிமக்களை நாம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்லும்போதும், 2015-ம் ஆண்டு ஏமனில் ஏற்பட்ட நெருக்கடி சூழலில் செய்ததைப் போல இதர 40 நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மீட்ட போது நாம் உலக அமைதிக்கு பங்களித்தோம்.  ஐ.நா. அமைதிக் காக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கணிசமாக துருப்புக்களை அனுப்பிய போதும், உலக அமைதிக்கு பங்களிக்கிறோம்.

   தூய்மையான மின்சாரம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், 2015-ம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையை செயல்படுத்துவதில் இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் ஒன்றுபட்டுள்ளன.  இந்தியா தனது எரிசக்திக் கலவையில் நிலத்துக்கு அடியிலிருந்து எடுக்காத எரிபொருளின் அளவை அதிகரித்து வருகிறது.

இந்தியா-கிரேக்க வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர், இருதரப்பு வர்த்தகம்,  530 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், இது இந்நாடுகளின்  வளத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகும் என்றும் கூறினார்.

------



(Release ID: 1535897) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Marathi , Hindi