சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் தேசிய ஆரோக்கியப் பாதுகாப்புச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 20 மாநிலங்கள் கையொப்பமிட்டன

கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சிக் கோட்பாட்டின் உணர்வில் அதன் வெற்றிக்காக ஒன்றிணைந்து உழைப்போம் : ஜே பி நட்டா

Posted On: 14 JUN 2018 4:41PM by PIB Chennai

தில்லியில் இன்று (14.06.2018) நடைபெற்ற நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தேசிய ஆரோக்கியப் பாதுகாப்புச் செயல்திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் தொடக்க நிகழ்ச்சியைக் குறிக்கும்வகையில் 20 மாநிலங்களின் நலத்துறை அமைச்சர்களுடன் மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டார். மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்கள் திரு. அஸ்வின் குமார் சவுபே மற்றும் திருமதி அனு பிரியா படேல் , நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த். நிதி ஆயோக் ஆரோக்கிய உறுப்பினர் டாக்டர் வினோத் பால், நலத்துறைச் செயலர் திருமதி பிரீதி சூடன், ஆயுஷ்மான் பாரத் – தேசிய ஆரோக்கியப் பாதுகாப்புச் செயல்திட்டத் தலைமைச் செயலதிகாரி திரு. இந்து பூஷண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பிரதமருக்குத் தமது நன்றியைத் தெரிவித்துப் பேசிய திரு. ஜே. பி. நட்டா, மக்களுக்குச் சேவையாற்ற கிடைத்த இந்த மாபெரும் வாய்ப்பை அளித்த பிரதமருக்கு மிகவும் நன்றி என்றார். நாட்டின் ஆரோக்கியப் பாதுகாப்பு மண்டலத்தில் இந்த முன்முயற்சி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மேலும் கூறினார். நம்முடைய இந்தப் பணிகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவோம் என்றார் அமைச்சர். “ உலகின் மாபெரும் ஆரோக்கிய ஒப்புறுதித் திட்டத்திற்க்காக நாம் இணைந்து பாடுபடுவோம், இணைந்து கற்போம், அதன் விளைவாகக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு உழைப்போம் “ என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

***



(Release ID: 1535586) Visitor Counter : 137


Read this release in: English , Marathi