விவசாயத்துறை அமைச்சகம்

இந்திய தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு 2017– 18 ஆம் ஆண்டில் 31.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளையும் எண்ணெய் வித்துகளையும் கொள்முதல் செய்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பலனளித்துச் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2018 4:20PM by PIB Chennai

விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம் ஆகியவற்றைக் கொள்முதல் செய்யும் இந்திய தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பானது, 2017 – 18 ஆம் ஆண்டில் 31.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளையும் எண்ணெய் வித்துகளையும் கொள்முதல் செய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு பிற பொருளாதார அளவீடுகளிலும் சாதனை நிகழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து, 2018 – 19 ஆம் ஆண்டில் சாதனை லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய அரசில் இந்திய தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு, பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முறைகேடுகள் அதனைப் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியிருந்தது. ஏராளமான வழக்குகள் குவிந்த நிலையில் நிறுவனம் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த நான்காண்டு கால ஆட்சியின்போது (2011 – 14) கூட்டமைப்பானது வெறும் 8 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளையும் எண்ணெய் வித்துகளையும் மட்டுமே கொள்முதல் செய்திருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திறமை வாய்ந்த தலைமையின் காரணமாக, 2014 – 18 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 64 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளும் எண்ணெய் வித்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in வலைதளத்தைப் பார்க்கவும்.   

 

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1535579) வருகையாளர் எண்ணிக்கை : 124
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English