நீர்வளத் துறை அமைச்சகம்

முக்கிய இந்தியப் பயிர்களுக்கு நீர் பயன்பாடு குறித்த நபார்டு நூலை நிதின் கட்கரி வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 14 JUN 2018 2:49PM by PIB Chennai

மத்திய நீர்வளத்துறை  நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல், கப்பல்துறை, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, நபார்டு பிரசுரித்துள்ள முக்கிய இந்திய பயிர்களுக்கான நீர் பயன்பாடு குறித்த நூலை புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய திரு.கட்கரி, நமது நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்தார். ஆனால், நீர் ஆதார மேலாண்மை மற்றும் திட்டமிடுதலை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறினார். சிறந்த நீர் ஆதார மேலாண்மைக்கான புதுமையான வழிமுறைகள் குறித்து நமது அமைச்சகமும், மத்திய அரசும் ஆலோசித்து வருகிறது என்று அவர் கூறினார். தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா ஆகிய மூன்று இடங்களில் கடல் நீரை உப்பு நீக்கி பாசனத்துக்கும், இதரப் பணிகளுக்கும் பயன்படுத்துவது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.

                                *******


(रिलीज़ आईडी: 1535576) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , हिन्दी , Bengali