நித்தி ஆயோக்

விரிவான நீர் மேலாண்மை குறியீட்டை நித்தி ஆயோக் வெளியிடுகிறது

Posted On: 13 JUN 2018 3:57PM by PIB Chennai

    நீர் ஆதாரங்களை திறம்பட நிர்வகிப்பதில் மேம்பாட்டை மதிப்பீடு செய்வதற்கான கருவியாக விரிவான நீர் மேலாண்மை குறியீட்டை நித்தி ஆயோக் வெளியிடவுள்ளது. தண்ணீரை திறம்படவும், அதிகபட்சமாக பயன்படுத்துவதையும், அதன் மறுசுழற்சியையும் அவசரமாக மேற்கொள்வதில் மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக இக்குறியீடு வெளியிடப்படுகிறது.

   இந்தக் குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் / துறைகளுக்கும் பயனுள்ள தகவல்கள் கிடைப்பதால், நீர் ஆதாரங்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேலும் திறம்பட்ட வகையில், உருவாக்கி செயல்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

  மத்திய நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் அமைச்சர் திரு. நிதின் கட்கரி, செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்தக் குறியீட்டை வெளியிடுவார். இதற்கான நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ்குமார், நித்தி ஆயோக் முதன்மை நிர்வாக அலுவலர் திரு. அமிதாப் காந்த், நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகச் செயலாளர் திரு. யு.பி. சிங், ஊடக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு. அமிர்ஜித் சின்ஹா, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் திரு. பரமேஸ்வரன் ஐயர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

  திட்டங்களின் விளைவுகளை அளவீடு செய்வதற்கும் அப்பாற்பட்டு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு மற்றும் போட்டித் திறன்கொண்ட, சமஷ்டி அமைப்பு குறித்த தனது கடமையை நிறைவு செய்யும் வகையில், நித்தி ஆயோக் பல்வேறு குறியீடுகளை வெளியிட்டு வருகிறது.

===========



(Release ID: 1535306) Visitor Counter : 118


Read this release in: English , Hindi , Marathi , Malayalam