எஃகுத்துறை அமைச்சகம்

ஒடிஸா மாநிலம் 10 கோடி டன் எஃகு உற்பத்தி செய்ய இயலும்: எஃகு துறை அமைச்சர்

प्रविष्टि तिथि: 13 JUN 2018 10:46AM by PIB Chennai

மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு. சவுதாரி பிரேந்தர்சிங் 2018 ஜூன் 12ஆம் தேதி கலிங்கா நகரில் ஒடிஸா மாநிலத்தில் உள்ள பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளின்  மேலாண்மை இயக்குநர்கள் / முதன்மை நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அமைச்சர், நாடு எஃகு உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறினார். 2017-2018ஆம் நிதியாண்டில் 10 கோடி டன் எஃகு உற்பத்தி செய்தது. 2014-2015 மற்றும் 2015-2016 ஆம் ஆண்டுகளின்போது இந்திய எஃகு தொழில் எதிர்நோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு கொள்கை திட்டங்கள் மூலம் இந்த பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.  தேசிய எஃகு கொள்கை மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு எஃகுப் பொருட்கள் கொள்கை ஆகியன 2017ஆம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டன. இதனையடுத்து, உள்நாட்டு தொழில்களுக்கு நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

  ஒடிஸா மாநிலம் எஃகு உற்பத்தி செய்யும் முக்கியமான மாநிலமாகும். நாட்டின் எஃகு உற்பத்தயில் பாதிக்கும் மேலான எஃகு இம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தாது வளமும், சுரங்கங்களும் அதிகமாக உள்ளன. 2030 - 2031ஆம் ஆண்டுக்குள் 30 கோடி டன் எஃகு உற்பத்தி செய்யவேண்டுமென தேசிய எஃகு கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 10 கோடி டன் எஃகு உற்பத்தி திறன் ஒடிஸாவில் உள்ளது.

  மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

===========


(रिलीज़ आईडी: 1535239) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी