கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

2018 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் பெரிய துறைமுகங்கள் 2.41% வளர்ச்சி பெற்றுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUN 2018 6:24PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் 2.41% வளர்ச்சி பெற்றிருப்பதுடன், 2018 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் 116.26 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, சாதனை படைத்துள்ளன. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 113.52 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டது.

     2018 ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில், 9 துறைமுகங்கள் (கொல்கத்தா(ஹால்டியா உட்பட), பாரதீப், விசாகப்பட்டினம், காமராஜர், சென்னை, கொச்சி, புது மங்களூரு, ஜவஹர்லால்நேரு துறைமுகம் மற்றும் தீன்தயாள் துறைமுகங்கள் சரக்குப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன.

முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குப் போக்குவரத்து: 

  • காமராஜர் துறைமுகம் மிக அதிக (11.69%) வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா (ஹால்டியா உட்பட) (11.33%), கொச்சி (8.70%), பாரதீப் (7.61%) மற்றும் புது மங்களூரு (6.66%) வளர்ச்சி பெற்றுள்ளன. 
  • காமராஜர் துறைமுகத்தில், இதர பல்வகை சரக்குகள் 28.16%, இதர திரவங்கள் 16.67%, அனல் & நீராவி நிலக்கரி 6.64% மற்றும் பி.ஓ.எல் 5.99% அளவிற்கு கையாளப்பட்டதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை காணவும்.    


(வெளியீட்டு அடையாள எண்: 1535051) வருகையாளர் எண்ணிக்கை : 154
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी