பிரதமர் அலுவலகம்

சீனாவின் சிங்டா நகருக்குப் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 08 JUN 2018 9:29PM by PIB Chennai

சீனாவில் உள்ள சிங்டாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்  பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.

   “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ் சி ஓ) அரசுத்தலைவர்கள்  மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவில் உள்ள சிங்டாவுக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன்.

   இந்த மன்றத்தின் முழு உறுப்பினர் ஆன பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமையேற்று செல்வதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.   போக்குவரத்துத் தொடர்பு, வர்த்தகம், பழக்க வழக்கங்கள், சட்டம், சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடர் அபாயங்களை குறைக்கவும், மக்களோடு மக்களின் உறவுகளை வளர்க்கவும், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவது உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான மிக உயர்ந்த  நிகழ்ச்சி நிரலை எஸ்.சி.ஓ. கொண்டிருக்கிறது.  எஸ்.சி.ஓ-வில் இந்தியா முழு உறுப்பினரான பிறகு கடந்த ஓராண்டில், இந்த அமைப்போடும், அதன் உறுப்பு நாடுகளோடும் இந்த விஷயங்களில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிங்டா உச்சிமாநாடு எஸ்.சி.ஓ நிகழ்ச்சி நிரலை மேலும் வளப்படுத்தும் என்றும், எஸ்.சி.ஓ-உடன் இந்தியாவின்  செயல்பாட்டுக்கு புதிய தொடக்கத்தை கொண்டுவரும் என்றும், நான் நம்புகிறேன்.

     எஸ்.சி.ஓ-வின் உறுப்பு நாடுகளுடன் இந்தியா ஆழமான பல்வகை பரிமாணங்களைக் கொண்ட உறவுகளைப் பராமரித்து வருகிறது.  எஸ்.சி.ஓ. உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக எஸ்.சி.ஓ. உறுப்பு நாடுகளின் அரசுத்தலைவர்கள் உட்பட வேறு பல தலைவர்களை சந்திக்கவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்குமான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்”.

-------



(Release ID: 1535047) Visitor Counter : 112