நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் கடந்த நான்கு ஆண்டுகளின் முக்கியச் சாதனைகளையும் முன்முயற்சிகளையும் உயர்த்திப்பிடிக்கிறது

விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது : திரு. ராம் விலாஸ் பஸ்வான்

Posted On: 05 JUN 2018 6:12PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான், கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகளையும் சீர்திருத்தங்களையும் பற்றி விளக்குவதற்காகப் புது தில்லியில் இன்று (05.06.2018) செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டினார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் 2014 மே முதல் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நாட்டில் உணவு தானிய நிர்வாகத்தை மேலும் சிறப்பாக்கவும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் ஏராளமான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவிவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலன்  அரசின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது என்று  திரு. ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.

உணவு மற்றும் பொதுவினியோகத் துறை

 1. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் :  அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலுள்ள ஏறத்தாழ 80.72 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்  அமல்படுத்தப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தீட்டப்படாத தானியம்/கோதுமை/அரிசி ஆகியவற்றை கிலோ ஒன்றுக்கு ரூ. 1/2/3 என்னும் மாறாத வகையில் மத்திய வழங்கு விலையாக வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் விளைவாக உணவு மானியம் இப்போது ரூ. 1.43 லட்சம் கோடியாக உள்ளது. இது 2014- 15 இல் இருந்த ரூ. 1.13 லட்சம் கோடியை விட 26 % அதிகமாகும்.

குடும்ப அட்டைகளின் நீக்கம் : குடும்ப அட்டைகள் / பயனாளிகள் பதிவேடுகள் / ஆதார் பதிவு காரணமாகப் போலி அட்டைகள் கண்டறிதல், மாறுதல் / இடப்பெயர்வு / இறப்புகள், பயனாளிகளின் பொருளாதார நிலை மாற்றம் மற்றும் நடைமுறையில் இருக்கும்போதும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கத்தின்போதும் ஒட்டுமொத்தமாக 2.75 கோடி குடும்ப அட்டைகள் நீக்கம் / ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அரசு, ஆண்டுக்கு ரூ. 17,000 கோடி அளவுக்கு உணவு மானியத்தைச் சரியான இலக்காகக் கொண்டு எட்ட முடிந்திருக்கிறது.

மத்திய உதவியை வழங்குதல் : மாநிலங்களுக்கிடையே உணவு தானியப் பரிமாற்றம் மற்றும் நியாய விலைக் கடை முகமையாளர் ஆதாயம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக 2016 – 17 –ல் ரூ. 2,500 கோடியும் 2017 – 18 –ல் ரூ. 4,500 கோடியும் மாநில அரசுகளுக்கு மத்திய உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

நேரடிப் பயன் மாற்றம் (ரொக்கப் பணம்) : பண மாற்றத்தின் உணவு மானிய விதிகள், 2015”,  2015 ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது. அதன்படி உணவு மானியமானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். தற்போது சண்டிகர், புதுச்சேரி மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஆகியவற்றில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பொதுவிநியோகத் துறையானது, உணவு தானியப்  பணப் பரிமாற்றத்தை நோக்கி சீரான முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. அண்மையில், உணவு மற்றும் பொதுவினியோகத் துறையும் உலக உணவுத்திட்டமும்  இணைந்து உணவு தானியப்  பணப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்களுக்கு வழிகாட்டுவதற்காக கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 1. பொது வினியோக முறையில் முக்கியச் சீர்திருத்தங்கள் :

பொது விநியோக முறையில் ஆதார் பதிவு செய்தல் : போலியான / தகுதியற்ற / முறைகேடான குடும்ப அட்டைகளைக் களைவதற்காகவும், சரியான இலக்கான 83.41 % ஐ எட்ட அதாவது ஏறத்தாழ 19.41 கோடி குடும்ப அட்டைகள்   (2018 மே 29 நிலவரப்படி) ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016 ஆதார் சட்டத்தின் பிரிவு – 7 இன் கீழ், 2017 பிப்ரவரி 08 அன்று மானிய உணவு தானியம் அல்லது பணமாற்றத்தைப் பெற ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதற்கான அறிவிக்கையைத் துறை வெளியிட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளின் தானியக்கம் : மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட முன்னோட்டங்கள் மற்றும் கற்றல்களின் அடிப்படையில், 2014 நவம்பரில் உணவு மற்றும் பொது வினியோகத் துறையானது நியாய விலைக் கடைகளில் விற்பனை முனையைப்  பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் குறிப்புகளையும் வரையறுத்துள்ளது. தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகளில் 3,16,600 நியாய விலைக் கடைகள் (2018 மே 29 நிலவரப்படி) விற்பனை முனையைக் கொண்டுள்ளன.

பொது விநியோக முறையில் டிஜிட்டல் / பணம் அற்ற / பணம் குறைந்த பட்டுவாடாக்கள் : பணம் குறைந்த / டிஜிட்டல் பட்டுவாடா நடைமுறையின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, துறையானது ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா (ஏஇபிஎஸ்), யுபிஐ, யுஎஸ்எஸ்டி, டெபிட் / ரூபே அட்டைகள் மற்றும் இ- வாலட்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை 2016 டிசம்பர் 7 அன்று வெளியிட்டுள்ளது. தற்போது 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 51,479 நியாயவிலைக் கடைகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நிகழ்த்திவருகின்றன.

மேற்கண்டவற்றுக்கு அப்பால், குடும்ப அட்டைகளின் டிஜிட்டல் மயமாக்கம் 100 % முடிந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் வெளிப்படையான வலைவாசலைக் கொண்டுள்ளன. 30 மாநிலங்கள் இணைய வாயிலாக உணவுத் தானிய ஒதுக்கீடைக் கொண்டுள்ளன. 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கணினி மயமான வினியோகச் சங்கிலி மேலாண்மை முறையினைக் கொண்டுள்ளன.

புதிய மத்தியத் துறை திட்டம் பொது விநியோக முறையின் ஒருங்கிணைந்த மேலாண்மை : இந்தத் திட்டத்தை ரூ. 127.3 கோடி செலவில் 2018-19 ஆம் நிதியாண்டிலும் 2019-20 ஆம் நிதியாண்டிலும்  நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொதுவிநியோக முறை நடைமுறைகளின் மத்தியத் தரவுக் களஞ்சியம் மற்றும் மத்திய கண்காணிப்பு முறை ஆகியவற்றை உருவாக்க, பொது விநியோக முறை வலைப்பின்னலை நிலைநாட்டவும்  தேசிய அளவில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 1. உணவு தானியக் கொள்முதலில் சீர்திருத்தம்

2018- 19 ரபி சந்தைப் பருவத்தில் 347 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவாகும்.

2016- 17  கரீப் சந்தைப் பருவத்தில் அதுவரை இல்லாத அளவில் 381.06  லட்சம் மெட்ரிக் டன் நெல் (அரிசி வடிவில்) கொள்முதல் செய்யப்பட்டது.

 1.  முன்னேற்றம் காணும் உணவு தானியச் சேமிப்பு

       கிடங்குகளைக் கட்டுதல் : தனியார் நிறுவன உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 22.23 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கூட்டப்பட்டுள்ளது.

சேமிப்பில் நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு களஞ்சியம் : அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றைச் சேமித்துவைப்பதற்கான 100 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத்திறன் கொண்ட எஃகு களஞ்சியத்தை உருவாக்க இந்திய உணவுக் கழகமும் மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக கட்டுமானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 6.25 லட்சம் மெட்ரிக் டன் எஃகு களஞ்சியம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 23.5 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு அளிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்கு உணவு தானிய வினியோகம் : இந்திய உணவுக் கழக இருப்பிலிருந்து நன்கொடையாக / மனித நேய உதவியாக ஆஃப்கானிஸ்தானுக்கு 1.10 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டது.

இணைய வழி கொள்முதல் மேலாண்மை முறை : இதற்கான ஒரு மென்பொருளை இந்திய உணவுக் கழகம் மேம்படுத்தியுள்ளது. 2016 -17 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்ய இந்த முறையானது பயன்படுத்தப்பட்டது. இதுவரை, 19 முக்கியக் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் 17 மாநிலங்கள் இணைய வழிக் கொள்முதல் மேலாண்மை முறையை முழுக்கவும் நடைமுறைப் படுத்தியுள்ளன.

டிப்போ இணைய முறை : இந்திய உணவுக் கழகக் கிடங்குகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவும், டிப்போ மட்டத்தில் கசிவுகள் மற்றும்  தானியக்க செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் டிப்போ இணைய முறை” 2016 மார்ச் மாதத்தில் 27 மாநிலங்களில் உள்ள 31 டிப்போக்களில் தொடங்கப்பட்டது. தற்போது, ”டிப்போ இணைய முறை இந்திய உணவுக் கழகத்தின் 530 டிப்போக்களிலும் மத்திய பண்டகச் சாலையின் 156 டிப்போக்களிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

 1. பண்டகச் சாலை மேம்பாடு  மற்றும் ஒழுங்காற்று ஆணைய மாறுதல்கள்

எளிமையாக்கப்பட்ட பதிவு விதிகள்,2017 : பண்டகச் சாலைகளின் பதிவுப் போக்கை எளிமைப்படுத்தவும் அவர்களின் சிறந்த மற்றும் சீரிய ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்புக்காகவும் பண்டகச் சாலை (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) பண்டகச்சாலைப் பதிவு விதிகள் , 2017 அறிவிக்கப்பட்டது.

களஞ்சியங்களின் பதிவு : பாதுகாப்பான, நம்பகமான, வங்கிகளின் முறைகளை முன்னேற்றுவதற்காக இணையவழி பண்டகச்சாலை பதிவு முறை தொடங்கப்பட்டது. இதன் கீழ் இரண்டு களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.

 1. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளுக்குப்      போதுமான ஊட்டச்சத்துத் தரத்தை உத்தரவாதம் செய்ய  உணவுதானியம் ஒதுக்கீடு

இந்திய அரசு 2017 செப்டம்பர் மாதத்தில் புதிய திட்டம் ஒன்றைச் சீரமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நல நிறுவனங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின்     தேவையைச் சமாளிக்கும் வகையில் போதுமான ஊட்டச்சத்துத் தரத்தை உத்தரவாதம் செய்ய மானியவிலையில் உணவுதானியத்தை ஒதுக்கீடு செய்யும் வகையில் மத்திய அரசு அதன் திட்டத்தைச் சீரமைப்பு செய்துள்ளது.

இந்தத் திட்ட வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்சம் 2 / 3 பங்கு தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் விடுதி உறைவிட மாணவர்கள் மற்றும் பிற பிரிவு மாணவர்களையும் கொண்ட விடுதிகள் உணவு தானிய மானியத்தைப் பெறத் தகுதி பெற்றவை ஆகும். இந்தத் திட்டத்தின் கீழான உணவு தானியத்தின் மத்திய வெளியீட்டு விலையானது வறுமைக் கோட்டிற்குக் கீழான விலையில் நிர்ணயிக்கப்படுகிறது.

அரிசி அல்லது கோதுமை ஆகியவற்றை விநியோகிக்கும் அளவு       (வெவ்வேறு பகுதிகளின் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் விகிதாச்சாரம் முடிவு செய்யப்படும்) அப்பகுதி மக்களின் ஊட்டச்சத்துத் தேவையின் பிரகாரம் அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு தலா 15 கிலோ ஆகும்.

-----

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) ஓய்வூதியத் திட்டம், ஓய்வுக்குப் பிறகு மருத்துவ உதவித் திட்டம்

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) ஓய்வூதியத் திட்டம், ஓய்வுக்குப் பிறகு மருத்துவ உதவித் திட்டம்

இந்திய உணவுக் கழகத்தின் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையும் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ உதவி அளிக்கும் திட்டமும் வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை உள்ளது. இந்த இரு திட்டங்களுக்கு மத்திய அரசு 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய உணவுக் கழகத்தில் பணியில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பலனளிக்கும்.

இதில் ஓய்வூதியத் திட்டம் 1.12.2008ம் தேதியிலிருந்தும்  ஓய்வு பெற்றோர்க்கான மருத்துவ உதவித் திட்டம் 1.4.2016ம் தேதியிலிருந்தும் அமலுக்கு வருகின்றன.

நுகர்வோர் நலன்கள் துறை

 1. சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு

31 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை (1986) நவீனப்படுத்துவதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டமுன்வடிவு (2018) நாடாளுமன்றத்தில் 5.1.2018ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த மசோதா மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையகம் என்ற முகமையை அமைப்பதற்கு வழியமைக்கிறது. முறைகேடான வர்த்தக நடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்கள் ஆகியவற்றை விசாரிக்க இந்த மசோதா வகை செய்யும். அத்துடன், நுகர்வோர் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு மாற்றுவழியாக சமரசம் செய்து கொள்வதற்கான வழிமுறைக்கும் நுகர்வோருக்கு ஒரு பொருளால் பாதிப்பு ஏற்பட்டால், நடவடிக்கை எடுக்கவும் அந்த சட்ட முன்வடிவு வகை செய்யும். நுகர்வோர் ஆணையங்களில் வழக்கு நடைமுறைகளை எளிதாக்கவும் வகை செய்யப்படும்.

முதல் முறையாக கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு 2017ம் ஆண்டு அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

புதிய சந்தையில் நுகர்வோர்க்கு அதிகாரம் அளிப்பதுஎன்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. அத்துடன், மண்டல அளவில் ஒத்துழைப்பு குறித்தும் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்து, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்.

 1. தேசிய நுகர்வோர் உதவி மையம் (NCH)

நுகர்வோர் குறைகள், பிரச்சினைகளை அறிந்து உடனடியாகத் தீர்வு காண உதவும் வகையில் தேசிய நுகர்வோர் உதவி மையம் (National Consumer Helpline) வலுப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, மாதந்தோறும் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, மாதந்தோறும் 40 ஆயிரம் புகார்கள், குறைகளுக்குத் தீர்வு காணப்படுகின்றன. இதற்கான கட்டணமில்லாத எண்: 1800-11-4000 ஆகும். புகார் அளிப்போர் எளிதில் நினைவில் கொள்வதற்காக 14404 என்ற சிறிய குறியீட்டு எண் அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள  உதவி மையத்தில் 14 பணியாளர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புகார்களை விரைந்து கேட்டு தீர்வு காண இது உதவும்.

அத்துடன், நாடு முழுதும் தலா 10 பணியாளர்கள் கொண்ட 6 மண்டல உதவி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அந்தந்த மாநில மொழிகளிலேயே புகார் பதிவு செய்து தீர்வும் காணலாம்.

மேலும், இந்த தேசிய நுகர்வோர் உதவி மையம் 430 கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இது பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கத் துணை புரியும்.

 1. நல்ல தர உறுதி

புதிதாக இந்திய தர நிர்ணய அமைவனம் சட்டம் (2016) (Bureau of Indian Standards (BIS) Act, 2016 ) 2017ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி மக்கள் நலன், மனிதர், இதர உயிரினங்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காப்பு ஆகியவற்றுக்கு உகந்த வகையிலான எந்த உற்பத்திப் பொருளும், எந்தப் பதனிடப்படும் பொருளும், எந்தச் சேவையும் கட்டாயமாக சான்றிதழ் பெற்றாக வேண்டும் என வகை செய்யப்படும். உற்பத்தியாளர் எளிதாக வணிகம் புரிவதற்காக தாமே உறுதிபடுத்தி அறிவித்தல் உள்பட பலதரப்பட்ட மதிப்பீட்டு உறுதித் திட்டங்களை அறிவிக்கையாக வெளியிடவும் வழியமைக்கிறது. விலைமதிப்புள்ள உலோகங்களுக்குத் தர முத்திரை செய்வதையும் கட்டாயமாக்க இந்த சட்ட முன்வடிவு வகை செய்கிறது.

இந்திய தேசிய கட்டுமான விதி (NBC2016) என்ற புதிய வடிவிலான விதியும் வெளியிடப்பட்டுள்ளது.

IV அளவு உறுதி

நுகர்வோரின் நலன்களைக் காக்கவும் எளிதாக வணிகம் புரியவும், அளவியல் (பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள்) விதிகள் (Legal Metrology(Packaged Commodities) Rules) 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கீழ்க்கண்டவாறு திருத்தப்பட்டன:-

 1. மின் வணிகம் மூலம் பொருட்களை விற்பனை செய்ய அறிவிப்போர் விதிகளின்படி முறையான அறிவிப்புகளையும் அதில் இடம்பெறச் செய்யவேண்டும்.
 2. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஒரே மாதிரியான பண்டங்களுக்கு வெவ்வேறு அதிகபட்ச சில்லறை விலைகளை (MRPs) குறிப்பிடக் கூடாது.
 3. எழுத்துகள் மற்றும் எண்களின் அளவு நுகர்வோர் எளிதில் படிக்கக் கூடிய வகையில் பெரிதாக இடம்பெறச் செய்யவேண்டும்.
 4. மொத்த அளவு அறிவியல்பூர்வமாக பாக்கெட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.
 5. பார்கோடு (Bar Code) மற்றும் உடனடி தகவல் சேவைக்கான குறியீடு (QR Coding) தேவைக்கு ஏற்ப அனுமதிக்கப்படும்.
 6. உணவுப் பண்டங்கள் குறித்த அறிவிப்பு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்துக்கு (Food Safety & Standards Act) இசைந்ததாக அமையவேண்டும்
 7. மருந்துகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உரிய விதிகளின்கீழ் அறிவிக்கப்பட வேண்டிய பொருட்களில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன.

பண்டங்களின் காலம் விநாடி வரையில் பிராந்திய தரச் சான்றாதார ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வகங்கள் மொத்தம் ரூ. 100 கோடியில் அமைக்கப்படுகின்றன. இது சர்வதேச வர்த்தகத்துக்கும், வங்கி நடைமுறைகளுக்கும் பெரிதும் துணை புரியும்.

V அத்தியாவசிய உணவுப் பண்டங்களின்  விலை:

முதல் முறையாக நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் விலை உறுதிப்பாட்டு நிதியம் (Price Stabilization Fund) திட்டத்தின் மூலமாக 20.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கையிருப்புச் சரக்கு உருவாக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்களின் விலை தாறுமாறாக ஏறி, இறங்குவதைக் கையாள்வதன் நோக்கத்தில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. 4.6.2018ம் தேதி வரையில் உணவுத் தானியங்களின் கையிருப்பு 11 லட்சத்து 92 ஆயிரம் மெட்ரிக் டன் ஆகும். இது கொள்முதல் செய்யப்பட்ட 20 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் தானியத்தில் 8.58 லட்சம் தானியம் விற்பனை செய்தது போக மீதியாகும். தானியக் கையிருப்புக்காக இவ்வாறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இவ்வாறு தானியங்களின் உற்பத்தியும் கையிருப்பும் அதிகரிப்பதன் மூலம் விலை மலிவாகவும் சீராகவும் இருக்க வகை ஏற்பட்டுள்ளது.

22 அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் நாடு முழுவதும் உள்ள 102 மையங்களில் தினந்தோறும் கண்காணிக்கப்படுகின்றன.   அவற்றுடன், வடகிழக்கு மண்டலத்தில் இரு மையங்கள் உட்பட 45 விலை அறிக்கை மையங்கள் (Price Reporting Centres) 2014ம் ஆண்டு முதல் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

VI டிஜிட்டல் முன்முயற்சிகள்:

 • தேசிய நுகர்வோர் உதவித் தொலைபேசி இணைப்பில் (National Consumer Helpline) “இன்கிராம்” (INGRAM) எனப்படும் புதிய இணையவாசல் (Portal) கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இது நுகர்வோர் குறைதீர்ப்புப் பணி தொடர்புள்ள பல தரப்பட்டவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வழியில் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 • தேசிய நுகர்வோர் உதவித் தொலைபேசி இணைப்பைத் தொடர்பு கொள்வதற்கு 14404 எண் கொண்ட சிறிய குறியீடும் (short code) ஒரு கைபேசி செயலியும் (Mobile App) உருவாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் புகார்களைப் பதிவு செய்யவும் தீர்வு காணவும் இவை துணை புரியும்.
 • பண்டங்களின் மீது குறிப்பிடப்பட்டுள்ள பார்கோடு குறியீட்டை உணர்வதற்காக ஸ்மார்ட் கன்ஸ்யூமர்” (Smart Consumer) என்ற செயலி (Barcode Reader App) உருவாக்கப்பட்டுள்ளது. இது பண்டங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளவும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்யவும் உதவும்.
 • நுகர்வோர் பல்வேறு விவரங்களை அறிந்துகொள்வதற்காக குறு இணையம் (Micro Site) வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • ஆன்லைன் வழியாக புகார்கள் கூறும் நுகர்வோருடன் சமரசத் தீர்வு காண்பதற்காக இணையவழி நுகர்வோர் சமரச மையம் (Online Consumer Mediation Centre - OCMC) அமைக்கப்பட்டுள்ளது.
 • இவற்றுடன் Local Circles என்ற தளத்தில் நுகர்வோர் தங்களது கருத்துகள், யோசனைகள், குறைகள், புகார்களைத் தெரிவிக்க இணையவழி நுகர்வோர் சமூகம் (Online Consumer communities) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் உணர்வுகளை நுகர்வோர் நலத் துறை அறிந்து அதற்கேற்ப செயல்பட வழியேற்படும்.
 • நுகர்வோர்களை இணையதள வெளியில் இணைத்து ஓர் அமைப்பாகச் செயல்படுவதற்காக ஒரு கைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையவெளி புகார்கள், குறைகளைக் கேட்டு அவற்றின் நிலையை அறிந்து அறிவிக்கவும் தீர்வுகளை எட்டவும் இதர தகவல்களைத் தெரிவிக்கவும் இது உதவும்.

****

****(Release ID: 1535045) Visitor Counter : 2709

Read this release in: English , Hindi